

பள்ளி மாணவர்களுக்கான ‘தி இந்து’ யங் வேர்ல்டு 17-வது வினாடி-வினா போட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி கலை யரங்கில் வருகிற 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
கேம்ளின் மெக்கானிக்கல் பென் சில்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியானது, 4 முதல் 6-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் (ஜூனியர் பிரிவு), 7 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் (சீனியர் பிரிவு) என இரு பிரிவுகளாக நடைபெறும். ஜூனியர் பிரிவு போட்டி காலை 9 மணிக்கும், சீனியர் பிரிவு போட்டி பிற்பகல் 2 மணிக்கும் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 2 மாணவர்கள் கொண்ட ஒரு அணியாக கலந்துகொள்ள வேண்டும். ஒரே பள்ளியில் இருந்து எத்தனை அணிகள் வேண்டு மானாலும் போட்டியில் பங்கேற்க லாம். ஆனால், இறுதி போட்டிக்கு ஒரு பள்ளியில் இருந்து அதிக பட்சம் 2 அணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்க
போட்டியில் பங்கேற்க பதிவு கட்டணம் ஒரு அணிக்கு ரூ.200 (அதாவது ஒரு நபருக்கு ரூ.100). >https://www.thehindu.com/ywquiz என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் ‘தி இந்து’ அலுவலக கவுன்ட்டர் அல்லது போட்டி நடைபெறும் இடமான அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியிலும் பதிவுக் கட்டணத்தை காசோலை அல்லது பணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். வினாடி-வினா நிகழ்ச்சியை குயிஸ் மாஸ்டர் வி.வி.ரமணன் நடத்துவார்.
போட்டி நடக்கும் நாளன்று மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். முதல் பரிசாக பிஎஸ்ஏ லேடிபேர்டு அல்லது ஹெர்குலஸ் சைக்கிள் மற்றும் பரிசுக் கோப்பை, பாராட்டுச் சான் றிதழ் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். 2-ம் பரிசாக கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங் கேற்கும் அனைத்து மாணவர்க ளுக்கும் கேம்ளின் மெக்கானிக்கல் பென்சில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வினா-வினா போட்டியில் சரியான விடை களை சொல்லும் பார்வையாளர் களுக்கும் பரிசு காத்திருக்கிறது.
இந்த வினாடி-வினா போட்டியை ‘தி இந்து’ யங் வேர்ல்டு மற்றும் கேம்ளின் மெக்கானிக்கல் பென்சில் நிறுவனத்துடன் எல்ஐசி இந்தியா, பிஎஸ்ஏ லேடிபேர்டு, ஹெர்குலஸ், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, ஜெஎப்ஏ மாட்பர்ன், ரோஷன் பேக்ஸ், ஹண்டர் ஷர்ட்ஸ் கிட்டி கட்ஸ், லாரன்ஸ் அண்ட் மேயோ, ஃபன்ஸ்கூல் அண்ட் ஃபன்சிட்டி, நெஸ்லே ஆகியவை இணைந்து நடத்துகின்றன.