

காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தாயார் நேற்று பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் காலமானார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய சங்கராச்சாரியாராக இருப்பவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது தந்தை முக்கமள்ள கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, தாய் அம்பா லட்சுமி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சுவாமிகளின் 83 வயதான தாயார் அம்பா லட்சுமி, நேற்று காலை 11 மணியளவில் கிராம மக்கள் நடத்திய ஆயுள் ஹோமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மாரடைப்பால் உயிரிழந் தார்.
அவரது உடல், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக் காக இல்லத்தில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை தண்டலம் கிராம மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.