விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய 29 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய 29 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 இளைஞர்கள் மீது மெரினா போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

வேளாண் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல்வேறு கட்சிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இளைஞர் மற்றும் மாணவர் அமைப் பினரும் விவசாயிகளின் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில், விவசாயி களுக்கு ஆதரவாகவும், தமிழகத் தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என் பதையும் வலியுறுத்தி 29 இளை ஞர்கள் மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் திரண்டனர். திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் உள்ள கடலில் இறங்கி கோரிக்கை முழுக்கமிட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக சம்பவ இடத் துக்கு விரைந்த மெரினா போலீ ஸார் 29 இளைஞர்களையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாலையில் அனைவரையும் விடு வித்தனர். இந்நிலையில், கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 இளைஞர்கள் மீதும் மெரினா போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 (சட்ட விரோத கும் பலின் உறுப்பினராக இருத்தல்), 188 (அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

தொடரும் கண்காணிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் மெரி னாவில் மீண்டும் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக காம ராஜர் சாலையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை ஒவ்வொரு ஷிஃப்டிலும் 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 500 போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in