திமுகவுடன் இணைந்து செயல்பட தமாகா நிர்வாகிகள் விருப்பம்: ஜி.கே.வாசன் தகவல்

திமுகவுடன் இணைந்து செயல்பட தமாகா நிர்வாகிகள் விருப்பம்: ஜி.கே.வாசன் தகவல்
Updated on
1 min read

திமுகவுடன் இணைந்து செயல் படவே தமாகா நிர்வாகிகள் விரும்புகின்றனர் என அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னையில் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் சந்தித்தார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர்கள் தீவிர ஆலோ சனை நடத்தினர். விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாகவும் வாசன் தெரிவித்தார். இந்நிலையில், தமாகா மாநில நிர்வாகி கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:

காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகள், மீனவர் பிரச் சினைகளில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதிமுக அரசின் செயல்பாடுகள் இல்லை. காவிரி பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கவில்லை.

எதிர்க்கட்சியான திமுகதான் மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது, போராடியும் வருகிறது. வரும் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றே நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தேசிய கட்சி. தமாகா மாநிலக் கட்சி. தமாகாவின் தனித்தன்மையை நாங்கள் காப்பாற்றுவோம்.

இவ்வாறு வாசன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in