

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், 28 கி.மீ. தொலைவுக்கு நீட்டித்து செயல்படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் தார். இதற்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் உடன் இருந் தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக, நிருபர்களிடம் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக முதல்வருடனான சந்திப்பின்போது, இனயம் வர்த்தக துறைமுகப் பணிகளை விரைவாக தொடங்க, முழு ஆய்வறிக்கை தயாரிக்க தமிழக அரசு உதவியாக இருக்க வேணடும் என தெரிவித்தோம். முதல்வரும் அதற்கான நட வடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக உடனடியாக கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈசிஆர்-க்கு 10 ஆயிரம் கோடி
கிழக்கு கடற்கரை சாலை பணிகளும் துரிதப்படுத்தப்படும். இதற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை சுற்றுச்சாலை ரூ.5 ஆயிரம் கோடியில் விரிவுபடுத்தப்படு கிறது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ஏற்கெனவே உள்ள 19 கி.மீ. பறக்கும் சாலை திட்டத்துக்கு பதிலாக 28 கி.மீ. ஆக நீட்டிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மேலும் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்து, எண்ணெய் கசிவு, அதனால் ஏற்பட்டுள்ள இழப்பு, மீனவர் களுக்கு எவ்வாறு உதவுவது என்பது பற்றியும் பேசியுள் ளோம்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.