கர்நாடக வன்முறை குறித்து உரிய நடவடிக்கை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

கர்நாடக வன்முறை குறித்து உரிய நடவடிக்கை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறி யது:

காவிரி பிரச்சினை தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தில் புதுச்சேரி தலைமைச் செயலாளர் அரசின் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். காரைக்காலுக்கு வழங்க வேண்டிய 7 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் வேதனை தருகிறது. தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். சட்டத்தை கையில் எடுத்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. இது கண்டனத் துக்குரியது. காவிரி நதிநீர் விவகாரம் வரும்போதெல்லாம் கர்நாடகத்தில் வன்முறை தலைதூக்குகிறது. இச்செயல் மாநிலங்கள் இடையி லான சுமுக உறவுக்குக் குந்தகம் விளைவிக்கிறது என்றார்.

கனிமொழி எம்பி

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி நேற்று கூறும்போது, “அரசியல் சூழ்ச்சியால் கர்நாடக மக்கள், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். அங்கு வாழும் தமிழர்களைப் பாதுகாத்து, அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் ஈரோட்டில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசி, காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

அண்டை மாநிலங்களுடன் ஜெய லலிதா அரசு மோதல் போக்கை கடைபிடிப்பதால், தமிழகத்தின் உரிமையை உரிய முறையில் பெற முடியவில்லை. காவிரி பிரச்சினையில் முதல்வர் ஜெய லலிதா மெத்தனமாக செயல்பட்டு வருகிறார். கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டாலும், தமிழகத்தில் வாழும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றார்.

நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சிவகங்கையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: காவிரி நீர் பிரச்சினையில் அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைத் துப் பேசி ஒரே முடிவாக எடுக்க வேண்டும். தற்போது கர்நாடகாவில் மொழி வெறியை தூண்டி தமிழ் இளைஞர்களை அடித்துத் துன்புறுத்துகின்றனர். இதைத் தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சேதம் அடைந்த வாகனங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றார்.

இரா.முத்தரசன்

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக் காததே இரு மாநிலங்களில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம். காவிரி விவகாரத்தில் விரும்பத்தகாத சம்ப வங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த 100-க் கும் மேற்பட்ட பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் கடைகளை சூறையாடு கிறார்கள். வன்முறையை கட்டுப் படுத்தத் தவறிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, உடனடியாக ராஜி னாமா செய்ய வேண்டும் என்றார்.

கொமதேக

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச் செயலா ளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

கர்நாடகாவில் தமிழக பேருந்து களை தீ வைத்து எரிப்பதும், தமிழக மக்களையும், தமிழக நிறுவனங்களையும் குறி வைத்துத் தாக்குவதும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு உடனடியாக தலை யிட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து, தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in