

குற்றாலத்தில் சீஸன் தொடக்கத் திலேயே அருவிகளில் நேற்று காட்டாற்று வெள்ளம் கொட்டி யதால் குளிக்கத் தடைவிதிக்கப் பட்டது.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப் டம்பர் மாதங்களில் முதல் சீஸன்; டிசம்பர், ஜனவரி மாதங்களில் 2-வது சீஸன் என்று குற்றாலம் ஆண்டுதோறும் களைகட்டும். கடந்த ஒரு வாரமாக குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த 3 நாட்களாக பிரதான அருவியில் சிறிதளவு தண்ணீர் விழுந்தது. சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்.
நேற்று முன்தினம் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டது. காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் நேற்று காலை 8 மணியில் இருந்து அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்று லாப் பயணிகள் ஏமாற்றமடைந்த னர். நேற்று பகல் முழுவதும் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றும், மழையும் நீடித்தது. தொடர்ந்து வரும் நாட்களில் அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக இருக்கும்பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து சீஸன் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.