

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால் பொருட்களின் விலை குறையும் என தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.
‘தி இந்து’ நாளிதழ் எஸ்பிஆர் மார்க்கெட் ஆப் இந்தியா நிறுவனம், கலால், சுங்க வரி அலுவலகம், தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கம், தென்னிந்திய தொழில், வர்த்தக சங்கம் இணைந்து ஜிஎஸ்டி குறித்த சிறப்பு பயிலரங்கத்தை மதுரை தொழில், வர்த்தக சங்கக் கட்டிடத்தில் நேற்று நடத்தியது.
மத்திய கலால் வரித் துறை இணை ஆணையர் பைடி ராமபிரசாத், தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன், ஆடிட்டர் கோபால்கிருஷ்ண ராஜு, தென்னிந்திய வர்த்தக சங்க செயலர் ராகவன் ஆகியோர் பயிலரங்கை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியை பேச்சாளர் நவ்ஷாத் தொகுத்து வழங்கினார்.
மத்திய கலால் வரித் துறை இணை ஆணையர் பைடி ராம பிரசாத் பேசியது: ஜிஎஸ்டி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். நாடு முழுவதும் ஒரே வரிமுறை அமலுக்கு வருவதால் வரி செலுத்துவது, விதிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை, புகாரை உடனுக்குடன் தீர்க்கலாம். ஜிஎஸ்டியால் வணிகர்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதில் இனி செக் போஸ்ட்களில் பிரச்சினை இருக்காது. ஜிஎஸ்டிக்கு வணிகர்கள் முழுமையாக மாறினால், அது அவர்கள் வணிகத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். வியாபாரத்தை கவுரமாகச் செய்யலாம். இல்லாவிட்டால், அது அவர்களுக்கு கஷ்டமாக மாறி விடும். ஜிஎஸ்டிக்கு வணிகர்கள் மாற, மத்திய கலால் வரித்துறை எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது. வணிகர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தக் காத் திருக்கிறது. ஆனால், எக்காரணம் கொண்டு ஜிஎஸ்டிக்கு மாறாமல் சட்டத்துக்கு விரோதமாக இனி வணிகம் செய்ய முடியாது என்றார்.
தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் பேசியது: ஜிஎஸ்டி வரி ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. எக்காரணம் கொண் டும் ஜிஎஸ்டியை தள்ளிவைக்க வாய்ப் பில்லை. அதனால், வியாபாரிகள் அதற்குள் ஜிஎஸ்டிக்கு மாறிவிடுங்கள். ஜிஎஸ்டி என்றைக்கு வந்தாலும், அதை சந்தித்துதான் ஆக வேண்டும். அதனால், தொழில் செய்யக்கூடிய முறையை மாற்றியாக வேண்டும். ஜிஎஸ்டி வந்தபிறகு வரி ஏய்ப்பது மிகவும் கஷ்டம். சிக்கிக்கொண்டால் நீங்க சம்பாதித்தது மட்டுமில்லாமல், அதற்கு முன் நீங்கள் கொண்டு வந்தது எல்லாவற்றையும் வரியுடன் அபராதம், வட்டியாகக் கட்ட வேண்டியிருக்கும். வரி ஏய்க்கக்கூடாது என நினைப்பவர்களுக்கு ஜிஎஸ்டி மிகவும் எளிமையானது. வரி ஏய்ப்பவர்களுக்கு ஜிஎஸ்டி கொடுமையானது.
தற்போது கமிஷனுக்கு பலர் சரக்குகளை அனுப்புவர். தற்போது அதற்கு வரி கிடையாது. இனி இந்த கமிஷன் விற்பனையெல்லாம் செய்ய முடியாது. அனால், பில் போட்டு வரி போட்டு சரக்குகளை அனுப்ப வேண்டும். அதனால், கமிஷனுக்கு வியாபாரம் செய்பவர்கள், ஜிஎஸ்டிக்கு தகுந்தமாதிரி தங்கள் தொழில் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். சிலர் தமிழகத்திலும், வெளிமாநிலத்திலும் குடோன்கள் வைத்திருப்பர். அந்த வெளி மாநில குடோன்களுக்கு சரக்குகளை வரி கட்டாமல் அனுப்புவார்கள். இனி வரி செலுத்தி, பில் போட்டுத்தான் அனுப்ப வேண்டும். அதனால், இனி வெளிமாநிலங்களில் சரக்கு குடோன்கள் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். வரி சம் பந்தமாக வணிகர்கள், இனி ஜிஎஸ்டி கவுன்சிலிடம்தான் வலியுறுத்த முடியும். அவர்கள்தான் வரியை கூட்டுவதா, குறைப்பதா என்பதை முடிவு செய்வர். ஜிஎஸ்டி வந்தபிறகு பொருட்களின் விலை குறையும். வாடிக்கையாளர்கள் தற்போது வாங்கும் பொருட்களுக்கு வரியாகச் செலுத்துவதை விட ஜிஎஸ் டியில் வரி குறைவாக இருக்கும். அதனால் வாடிக்கையாளர்கள் அதி களவு பொருட்கள் வாங்குவார்கள். அதிகாரிகளை வியாபாரிகள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால், லஞ்சம் குறையும்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சரக்கு எடுக்க வேண்டுமென்றால் இ-வே பில் எடுக்க வேண்டும். இந்த இ-வே பில்லுடன் சென்றால் வழியில், எந்த இடத்திலும் சரக்குகளை நிறுத்தமாட்டார்கள். அதனால், ஜிஎஸ்டி-க்குள் வந்தால் தொழிலை பயமில்லாமல் தொடரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
ஆடிட்டர் சி.ஏ.கோபால்கிருஷ்ண ராஜு பேசியதாவது: ஜிஎஸ்டிக்கு இன்னும் 40 சதவீதம் பேர் மாறாமல் உள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக தெலங்கானாவைச் சேர்ந்த 88 சதவீதம் பேர் ஜிஎஸ்டிக்கு மாறி உள்ளனர். என்ன வியாபாரம் செய்கிறோமோ, அதை அரசுக்கு தெரிவிக்கவே இந்த ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுகிறது. வியாபாரத்தில் காட்டுகிற வர்த்தகப் பரிமாற்றமும், கணக்கில் காட்டுவதும் வேறு மாதிரியாக இருக்கும். இனி அப்படி செய்ய முடியாது.
வணிகர்கள், தங்கள் கோரிக்கையை தெரிவிக்கும்போது, அரசிடம் அவர்களை பற்றிய புள்ளி விவரம் இருந்தால் மட்டுமே, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். ஜிஎஸ்டியை அமல்படுத்திய பின், எதிர்காலத்தில் எல்லா வணிகர்களுடைய ஜாதகமே அரசிடம் இருக்கும். ஜிஎஸ்டியிலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. இது பெரிய சட்டம், அமல்படுத்தும்போது இதுபோன்ற சிறுசிறு பிரச்சினைகளை சரி செய்து விடலாம். தற்போது ஜிஎஸ்டி-யில் இன்வாய்ஸ் மட்டுமில்லாது, அதனுடன் தொடர்புடைய அனைத்து வவுச்சர்களையும் கணக்கில் காட்ட வேண்டும். அதனால், இனி கண் ணாடி மாதிரி கணக்கை வைத்துக் கொள்பவர்களை மட்டுமே ஜிஎஸ்டி ரத்தினக் கம்பளம் விரித்து வரவே ற்கும். கணக்குக்கு இத்தனை நாள் முக்கியத்துவம் கொடுக்காதவர்கள், ஜிஎஸ்டி வந்தபிறகு கணக்கு எத்தனை முக்கியம் என்பது தெரிய வரும். வியாபாரத்தில் வாகன உரிமையாளர்கள், குடோன் உரிமையாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட மூவரும் முக்கியமானவர்கள். இவர்கள் மூவரையும் தற்போது ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்துவிட்டனர். இதில் யார் எதை மறைத்தாலும் தவறு நடந்தாலும், கண்டிப்பாகச் சிக்க வாய்ப்புள்ளது.
இத்தனை நாள் வணிகத்தில் ‘ஸ்டாக் புக்’ பராமரிப்பு இல்லாமல் இருந்தது. ஜிஎஸ்டியில் ‘ஸ்டாக் புக்’ உள்ளிட்ட அன்றாட வணிகத்தின் பிரேக் அப்பை கொடுக்க வேண்டும். இனி செக்போஸ்ட்டில் இ-வே பில் எலக்ட்ரானிக் பில், இ-வே பில்லை பேப்பராக வைத்திருப்பவர்கள், இ-வே வைத்திருக்காதவர்கள் என மூவரையும் பிரிப்பார்கள். ரூ.50 ஆயி ரத்திற்கு மேல் சரக்குகள் கொண்டு போனாலே இ-வே பில் வைத்திருக்க வேண்டும்.
பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களுக்கு மட்டுமே இ-வே பில் தேவையில்லை. அதனால், இனி நாட்டில் பதிவு செய்யாத வியாபாரிகளே இருக்க வாய்ப்பில்லை. அப்படி பதிவு செய்யாமல் வியாபாரம் செய்பவர்கள், சரக்கு பரிமாற்றம், வங்கி பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக சிக்கி விடுவார்கள். ஜிஎஸ்டி வருகையால் அக்கவுண்டன்ஸ் படித்தவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
ஒரு காலத்தில் பிகாம், சிஏ படித்தவர்களுக்கு மவுசு இருந்தது. அதன்பிறகு குறைந்துவிட்டது. தற் போது மீண்டும் ஜிஎஸ்டியால் மவுசு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.