

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ததால் பாதிக்கப்பட்டவர்க ளின் கண்பார்வை இழக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதராத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒயிட் ஸ்வான் பவுண்டேசன் சார்பில் மனநலப் பிரச்சினைகளை கையாள்வது குறித்த www.whiteswanfoundation.org என்ற தமிழ் இணையதள தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த இணையதளத்தை தொடங்கி வைத்து சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:
யாரேனும் தனக்கு மன அழுத்தமே இல்லை என்று சொன்னால் அவர்கள் தவறான தகவலை அளிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நூறில் பத்து பேருக்கு ஏதாவது ஒரு வகையில், மன ரீதியான பிரச்சினைகள் இருப்பது இயல்பு. அதில் ஒரு விழுக்காட்டினருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுகிறது.
எனவேதான், கணக்கீடு அடிப்படையில் தேசிய மன நல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் தூத் துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 3,000 பேரிடம் மன நலன் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மாநிலத்துக்கான ஒரு திட்டம் கிடைக்கும். இதன்பிறகு, மனநலன் தொடர்பாக எந்தப் பகுதியில் எந்த மாதிரியான நடவடிக்கை தேவைப்படுகிறது என்பதை அறிய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ததால் பார்வை பாதிக் கப்பட்டவர்கள் குறித்து ஜெ.ராதா கிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், “கண்புரை அறுவை சிகிச்சை யால் பாதிப்படைந்தவர்கள் சேலம் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்து வமனைகளில் சேர்க்கப்பட் டுள்ளனர்.
அவர்களுக்கான மருத்துவச் செலவை அரசு ஏற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் கண் பார்வை இழக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. மேலும், கிருமித்தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகளை அனுப்பியுள்ளோம்.
தற்போது ஆரம்ப கட்ட ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. இறுதி அறிக்கை 2 அல்லது 3 நாள்க ளில் கிடைத்துவிடும். அதன் பிறகே உண்மை காரணம் தெரியவரும். சென்னை அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்தது குறித்தும் விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஓரிரு நிகழ்வுகளுக்காக மக்கள் பீதியடைய வேண்டி யதில்லை” என்றார்.