

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 1-1-2006-ல் இருந்து மாதம் ரூ.600 வரை திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதி யம் பெறுபவர்களுக்கு மாதம் ரூ.20-ம், ரூ.600-க்குமேல் திருத்தப் பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுபவர் களுக்கு மாதம் ரூ.40-ம், 1-7-2014 முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான தனிப்பட்ட நிலுவைத் தொகை உடனடியாக ரொக்கமாக வழங்கப்படும்.
உள்ளாட்சி மன்றங்களில் பணி யாற்றும் பணியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.