

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நீதி கிடைக்கவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார்.
கச்சத் தீவை மீட்க வலியுறுத்தி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி எம்பி தலைமை வகித்தார். அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது: இலங்கை கடற்படையினரால் 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை நீதி கிடைக்கவில்லை. குஜராத், கேரள மீனவர்கள் பிற நாட்டினரால் கொல்லப்பட்டிருந் தால், டெல்லி கொந்தளித்திருக்கும். தமிழக மீனவர்கள் என்பதால்தான் நீதி கிடைக்கவில்லை. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாஜக, காங்கிரஸ் ஆகியவை ஒரே கொள் கையைத்தான் கடைபிடிக்கின்றன.
கச்சத் தீவில் தமிழக மீனவர் களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை களை நிலைநாட்ட வேண்டும். இலங் கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மீனவர்களுக்கு தனி அமைச்ச கம் அமைப்போம் என்று ராமேசு வரத்தில் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 கோடி யும், காயமடைந்த ஜெரோன் குடும் பத்துக்கு ரூ. 10 லட்சமும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். பிரிட்ஜோ மரணத்துக்குக் காரண மான இலங்கை கடற்படை அதி காரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பாமக தொண் டர்களும், மீனவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பின்னர், தங் கச்சிமடத்தில் மீனவர் பிரிட்ஜோவின் பெற்றோரை சந்தித்து அன்புமணி ஆறுதல் கூறினார்.