

பட்டாசு வெடிக்கும்போது காலில் தீக்காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனை தோல் வங்கியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அழகியல் துறை செயல்பட்டு வருகி றது. இந்த துறையை தொடங்கிய மறைந்த டாக்டர் ஜி.ஆர்.ரத்ன வேல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி மருத்துவமனையில் நேற்று நடந் தது. மருத்துவமனை டீன் பொன் னம்பல நமச்சிவாயம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துறைத் தலைவர் எம்.மணிமேகலை முன் னிலை வகித்தார். சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி, அழகியல் துறையின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.
மருத்துவ நிபுணர் தகவல்
அழகியல் துறை பற்றி டாக்டர் எம்.மணிமேகலை கூறிய தாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளிலேயே இந்த மருத்துவ மனையில்தான் அழகியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையை மறைந்த டாக்டர் ரத்ன வேல் தொடங்கினார். இந்த துறை யில் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசர் சிகிச்சை யும் செய்யப்படுகிறது. எப்போதும் அழகாகவும், இளமையாகவும் இருக்க போடாக்ஸ் ஊசி போடப் படுகிறது. தலையில் முடி நடுவது போன்ற சிகிச்சைகளும் செய்யப் படுகின்றன. தீ, அமிலம், மின்சாரம், மருந்து மற்றும் கெமிக்கல் அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி ரூ.70 லட்சம் செலவில் அழகியல் துறையில் தோல் வங்கி தொடங் கப்பட்டது. இயற்கை மரணம் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள் தோல் தானம் செய்து வந்தனர்.
சிறுவனுக்கு சிகிச்சை
இந்நிலையில் பட்டாசு வெடிக் கும்போது காலில் தீக்காயம் ஏற்பட்ட சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது அந்த சிறுவ னுக்கு காலில் இருந்த தோல் பலத்த சேதமடைந்தது. தோல் வங்கியிலிருந்து தோலை எடுத்து சிறுவனின் காலில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அந்த சிறுவனின் உடல்நிலை நலமாக உள்ளது. தோல் வங்கி தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது. இந்த தோல் வங்கியில் மூலம் முதல் முறையாக சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அழகியல் துறை செயல்பாடு மற்றும் துறையை தொடங்கிய மறைந்த டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி மருத்துவமனையில் நேற்று நடந்தது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம், அழகியல் துறை தலைவர் எம்.மணிமேகலை உள்ளிட்டோர்.
தற்போது அந்த சிறுவனின் உடல்நிலை நலமாக உள்ளது. தோல் வங்கி தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது. இந்த தோல் வங்கியில் மூலம் முதல் முறையாக சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.