

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக நேரடி முகவர்க ளுக்கான நேர்காணல் வரும் 25-ம் தேதி அன்று நடைபெறுகிறது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக நேரடி முகவர்களுக்கான நேர்காணலை அஞ்சல் அலுவலகம் வரும் 25-ம் தேதி நடத்துகிறது. அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் நேரடி முகவராகும் விருப்பம் உள்ளவர்கள், கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதியில் வசிப்பவர்கள், 10-ம் வகுப்பில் தேர்ச்சியும், 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள பகுதியில் வசிப்பவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வேலையில்லா, சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.
வயது வரம்பு 18-லிருந்து 60 வரை. காப்பீடு விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி மேற்கொண்டவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக நேரடி முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25-ம் தேதியன்று காலை 11 மணிக்கு எண்.2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017-ல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரக் குறிப்பு, வயதுச் சான்று, தேவையான கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றி தழ்களுடன் பங்கேற்கலாம். அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.