அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை: நவநீதகிருஷ்ணன் எம்.பி. கருத்து

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை: நவநீதகிருஷ்ணன் எம்.பி. கருத்து
Updated on
1 min read

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ அதிகாரம் இல்லை என அக்கட்சியின் எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கோரி தமிழகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை நேற்று சந்தித்த நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் இருக்கும்போது, ஓ.பன்னீர் செல்வம் தற்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும். ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ஆதா யத்துக்காக உண்ணாவிரதம் அறிவித்து, நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அவருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

எனக்கு தெரிந்தவரை தண்டனை பெற்றவர்கள் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்ககூடாது என்று எந்த சட்ட விதியிலும் இல்லை. சட்டமும் இல்லை. லாலு பிரசாத் யாதவ் தண்டனை பெற்றபின் அவரது கட்சியின் தலைவராகவே தொடர்ந்து நீடித்தார். எனவே, தண்டனை பெற்றவர்கள் அதிமுகவின் தலைவ ராக, பொதுச்செயலாளராக இருக்கக் கூடாது என கூறுவது சட்டத்துக்கு புறம்பானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்வி களுக்கு அவர் அளித்த பதில்கள்:

லாலு பிரசாத் யாதவ், அவர் உருவாக்கிய கட்சிக்குத்தானே தலைவ ராக இருந்தார்?

சசிகலா பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தற்போது பொதுச் செயலாளராக உள்ளார். தானே இப்பதவிக்கு வர அவர் முயற்சிக்க வில்லை. ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் மூத்த தலைவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து தேர்வு செய்த பின்னர்தான் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளரானார். எனவே, எப்படி லாலு பிரசாத் யாதவ் தண்டனை பெற்றபின் தலைவராக நீடிக்க தடையில்லையோ, அதேபோல சசிகலாவும் அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவு உங்களுக்கு சாதகமாக வருமா?

அதிமுகவுக்குள் ஏற்படும் பிர ச்சினைகள் அல்லது பதவி மாற்றங்களில் தலையிட நீதிமன் றத்துக்கே அதிகாரமில்லை. தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதை சொல்லும் அதிகாரம்தான் உள்ளது. இது ஒரு உட்கட்சிப் பிரச்சினை. இதில் தலையிட நீதிமன்றத்துக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. அதை நாங்கள் எங்கள் பதிலில் தெரிவித்துள்ளோம்.

உங்கள் கட்சியில் பிரச்சினையே இல்லை என்கிறீர்களே?

எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரோ 4 பேர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். குடியரசுத் தலைவரிடமும் மனு அளித்துள்ளனர். அந்த விஷயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு. அது குறித்து வேறு யாரும் தலையிட முடியாது. தலையிடக் கூடாது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in