குறைந்த செலவில் விண்ணில் செலுத்த உதவும் ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை - குடியரசுத் தலைவர் வாழ்த்து

குறைந்த செலவில் விண்ணில் செலுத்த உதவும் ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை - குடியரசுத் தலைவர் வாழ்த்து
Updated on
2 min read

குறைந்த செலவில் ராக்கெட்டை செலுத்த உதவும் ‘ஸ்கிராம்ஜெட்’ இன்ஜினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்து புதிய சாதனை படைத்துள்ளது.

பொதுவாக ராக்கெட்களை விண் ணில் செலுத்தும்போது அவற்றின் எரிபொருளை எரிப்பதற்கு தேவை யான ஆக்சிஜன் கொள்கலனையும் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு ஆக்சிஜனை சுமந்து செல்வதால் புவியின் வளிமண்ட லத்தை தாண்டியும் ராக்கெட்டால் பயணிக்க முடியும். ஆனால், ஆக்சிஜன் கொள்கலத்தை சுமந்து செல்வதால் ராக்கெட்டின் எடை அதிகரிக்கிறது.

இதை தவிர்க்க, வளிமண்ட லத்தில் உள்ள ஆக்சிஜனையே எரிபொருளை எரிக்கப் பயன்படுத்தி னால் அதிக எடை கொண்ட ஆக்சி ஜன் கொள்கலனை சுமந்து செல்லும் தேவை இருக்காது. இதற்காகவே வளிமண்டல ஆக்சிஜனை உறிஞ்சி எரிபொருளை எரிக்கும் தொழில்நுட்பம், ‘ஸ்கிராம்ஜெட்’ இன்ஜினில் (Scramjet Engine) பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை ஸ்கிராம்ஜெட் இன்ஜின் கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்துள்ளது.

முதல்முறையாக ஸ்கிராம்ஜெட் இன்ஜினை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. இந்த சோதனைக்காக 2 ஸ்கிராம்ஜெட் இன்ஜின்கள், 3,277 கிலோ எடை கொண்ட ஆர்ஹெச்-560 என்ற ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 50-வது விநாடியில் இந்தச் சோதனை வெற்றி அடைந்தது.

சோதனை முயற்சியில் ராக்கெட், வளிமண்டலத்தில் 70 கி.மீ. தூரம் செலுத்தப்பட்டு, பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 320 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் திட்டமிட்டபடி விழுந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கலாமின் கனவுத் திட்டம்

‘ஸ்கிராம்ஜெட்’ இன்ஜின் சோதனை வெற்றி குறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் சிவன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஹைட்ரஜனை எரிபொருளாக வும், ஆக்சிஜனை எரியூக்கியாகவும் கொண்ட ஸ்கிராம்ஜெட் இன்ஜின் சோதனையின்போது ஒலியைவிட 6 மடங்கு வேகத்தில், 5 விநாடிகள் மட்டுமே தற்போது இயக்கிப் பார்க்கப்பட்டது. இனிவரும் காலங்களில் அதிக விநாடிகளுக்கு இயக்கிப் பார்க்கும் சோதனை நடத்தப்படும். ஸ்கிராம்ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட்டை செலுத்துவது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுத் திட்டம் ஆகும்.

பயன்கள் என்ன?

ஸ்கிராம்ஜெட் இன்ஜினை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக, 400 டன் எடை கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் 85 சதவீத எடை, எரிபொருளாகத்தான் இருக்கும். அதிலும், 70 சதவீதம் ஆக்சிஜன் கொள்கலனின் எடையாகும். எனவே, அந்த எடையைக் குறைக்கும் விதமாக வளிமண்டல ஆக்சிஜனை உறிஞ்சி எரிபொருளை எரிக்கும் தொழில்நுட்பத்தை ஸ்கிராம்ஜெட் இன்ஜின் கொண்டுள்ளது.

இதன்மூலம், ஆக்சிஜன் கொள் கலனின் எடை குறைவதோடு, அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ராக்கெட்கள் மூலம் செலுத்த இயலும். மேலும், ராக்கெட்டை ஏவும் செலவும் பெருமளவில் குறையும். அதுமட்டுமின்றி, மறு பயன்பாட்டு விண்கலம் உருவாக்கத்துக்கும் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் சோதனை பெரும் உதவியாக இருக்கும்.

ஸ்கிராம்ஜெட் இன்ஜினை ‘ஸ்பேஸ் பிளேன்’ (Space Plane) எனப்படும் அதிவேக விமானங்களில் பயன்படுத்தும் போது ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சில மணி நேரங்களில் பயணம் மேற்கொள்ள முடியும். இதன்மூலம், பயண நேரம் குறையும்.

இவ்வாறு சிவன் கூறினார்.

குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஸ்கிராம்ஜெட் இன்ஜின் சோதனையை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ் ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in