முதல்வர், அதிமுக பொதுச் செயலர் பதவி: உ.பி. அரசியலை சுட்டிக்காட்டும் தம்பிதுரை

முதல்வர், அதிமுக பொதுச் செயலர் பதவி: உ.பி. அரசியலை சுட்டிக்காட்டும் தம்பிதுரை
Updated on
1 min read

உத்தரப்பிரதேச அரசியல் சூழலை உதாரணமாகக் காட்டி, தமிழகத்தில் அதிமுக தலைமை யும், முதல்வர் பதவியும் சசிகலா விடம் இருக்க வேண்டுமென தம்பிதுரை கருத்து தெரிவித் துள்ளார்.

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பி துரை, கோவை விமான நிலையத் தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உடனடியாக தமிழக முதல்வர் பதவியை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளும் அதுதான். ஆட்சியும், கட்சித் தலைமையும் ஓர் இடத்தில் இருக்க வேண்டும். இதுதான் அரசியலில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.

இன்று உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் அரசியல் சூழலை அனைவரும் பார்க்கிறோம். தந்தை கட்சித் தலைவராகவும், மகன் முதல்வராக இருந்தாலும் இருவருக்குள்ளும் மோதல் நடக்கிறது. இதுபோன்ற பல சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.

அதிமுகவைப் பொறுத்த வரை கட்சிக்கும், ஜெயலலிதா வுக்குமே மக்கள் வாக்களித்தார் கள். அதற்கேற்ப அவர் தலைமை யேற்று ஆட்சி நடத்தினார். இதே போலத்தான் எம்ஜிஆர் வெற்றி பெற்றபோது, அதிமுகவை தலைமையேற்று நடத்தினார். அண்ணா, மக்களவை உறுப்பின ராக இருந்தும்கூட ஆட்சி அமைத்த வுடனேயே கட்சித் தலைமையை ஏற்று ஆட்சி நடத்தினார்.

நெல்சன் மண்டேலா உட்பட உலகத் தலைவர்கள் பலரும் ஆட்சி அமைக்கும்போது, கட்சியின் தலைமையிலும் பதவி வகித்தார் கள். இதுதான் உலக நடைமுறை. இப்போது சசிகலாவும் அதிமுக கட்சித் தலைமை ஏற்றுள்ளார்; இனி அவர் ஆட்சியையும் தலைமையேற்று நடத்த வேண்டும் என்பதையே அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு நெருக்கடி கொடுப்பதாக இருக்குமா என்று கேட்ட போது, ‘மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள்? கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும்தானே?. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், மக்கள் எனக்கா வாக்களித்தார்கள்? கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும்தான் வாக்களித்தனர். எனவே தலைமை இடத்தில் உள்ள சசிகலா முதல் வராக வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளேன்’ என்றார்.

இதுதொடர்பாக, முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து கூற வேண்டுமென ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளது குறித்து கேட்ட போது, ‘திமுகவில்கூட கருணா நிதி முதல்வராகவும், கட்சியின் தலைமையாகவும் இருந்திருக் கிறார். ஸ்டாலினுக்கு பொறுப்பு கொடுக்கப்படவில்லையே. எதிர்க் கட்சியினர் என்னவேண்டுமானா லும் கூறுவார்கள்’ என்றார்.

அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்து கேட்ட போது, எதிர்ப்பே எழவில்லை எனக் கூறி பதிலளிக்க மறுத்தார் தம்பிதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in