

கடலாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சி.சுப்பிரமணியன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தொகுதி முன்னாள் எம்.எம்.ஏ. ஆர்.சி. சுப்பிரமணியன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
சுப்பிரமணியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பார எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் டி.பிரைட் ராபின்சன், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் எஸ். காளியப்பன், சேலம் புறநகர் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கழகச் செயலாளர் வி.கந்தசாமி, அரியலூர் ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் பி.தனபால், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பெரிய வெளிக்காடு தோப்பு கிளைச் செயலாளர் ஜே.வீரராகவன் ஆகியோர் மறைவுக்கும் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.