Published : 25 May 2017 10:03 AM
Last Updated : 25 May 2017 10:03 AM

பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாததால் உப்பாற்றின் ஊற்றுநீரை நம்பி உயிர்வாழும் கிராமம்: அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அவலம்

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து அடிப்படை வசதியான குடிநீர், சாலை, மின்சாரம், பேருந்து வசதிக்காக ஏங்கும் நிலையில் நாட்டாகுடி கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் குடிநீருக்காக உப்பாற்றில் குழிதோண்டி ஊற்றுநீர் பிடிப்பதற்கு குடங்களுடன் அலையும் பரிதாப நிலை இன் றளவும் நீடிக்கிறது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தது நாட்டாகுடி கிராமம். சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும், மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லாகுளம் பாலத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலும் இக்கிராமம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்துள்ளன. தண்ணீரின்றி ஊரை காலி செய்த குடும்பங்கள் போக தற்போது 50-க்கும் குறைவான வீடுகளே உள்ளன.






































































































இதனை ஒட்டியுள்ள உப்பாறு இக்கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சாரம் பெயரளவில் உள்ளது. நிலத்தடி நீர் உப்புத் தன்மையுடன் உள்ளதால் குடிக்க முடியாது. மாத்தூரிலிருந்து வரும் தண்ணீர் மேல்நிலைத்தொட்டியில் தேக்கப்படுகிறது. மின்தடை, மோட்டார் பழுது போன்ற பல காரணங்களால் குடிநீர் மாதத்துக் கொருமுறை கிடைக்கிறது. இதனால், வெளியிலிருந்து வரும் லாரிகளில் ஒரு குடம் ரூ. 10 கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் குடி நீருக்காக மாதம் ரூ. 2 ஆயிரம் செலவு செய்கின்றனர்.

அடிப்படை வசதியில்லாததால் பலர் படமாத்தூருக்கு குடிபெயர்வதால் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து அரசு ஆரம்பப்பள்ளி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீதமுள்ள குழந் தைகள் நடந்தே சென்று நல்லாகுளத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இக்கிராமத்துக்கு பேருந்து வசதி கிடையாது.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக இக்கிரா மத்தை சேர்ந்த சிலரின் மனக்குமுறல்கள்:

மீனாட்சிசுந்தரம்(60):

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எங்கள் ஊருக்கு பேருந்து வசதி இல்லை. சுகாதாரமான குடிநீரும் வழங்கவில்லை. உப்பாற்றில் குழிதோண்டி ஊற்றுநீரைத்தான் குடிக்கிறோம். மாத்தூ ரிலிருந்து வரும் குடிநீரும் முறையாக கிடைப்பதில்லை. இதற்கு தீர்வாக ரூ. 6.50 லட்சத்தில் அமைத்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணி முடிந்து ஓராண்டாகியும் செயல்படவில்லை.

ஆட்சியர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எங்கள் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜி.பாஸ்கரன் அமைச்சராக உள்ளார். அவராவது எங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என நம்புகிறோம்.

முருகன்(30):

நான் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் கிராமப் பெண்கள் தண்ணீ ருக்காக குடங்களுடன் அலை வதைப் பார்த்து எங்கள் கிராம இளைஞர்களுக்கு வெளியூ ர்க்காரர்கள் யாரும் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.

திருமணம் செய்வதற் காகவே ஊரைக் காலிசெய்து வெளியூர் செல்கிறோம். இதனால் குடியிருப்புகள் குறைந்துவருகின்றன. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் ஊரே காலியாகிவிடும்.

செல்வி(50):

நான் திருமணம் செய்து இந்த ஊருக்கு வந்ததில் இருந்து குடிநீருக்காக சிரம ப்படுகிறேன். என் மகன் மதுரை கல்லூரியில் படிக் கிறான். இங்கு தண்ணீர் வசதியில்லாததால் நண்பர்களை அழைத்துவர தயங்குகிறான். எங்கள் தலை முறைதான் கஷ்டத்தை அனுபவித்தோம். வரும் தலைமுறையிலாவது தண்ணீர் பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கிறோம்.


நாட்டாகுடி கிராமத்தில் செயல்படாமல் இருக்கும் சுத்திகரிப்பு நிலையம்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியது:

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்குவதற்கு தேவையான மின் அழுத்தம் கிடைக்கவில்லை. பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் செயல்படாமல் முடங்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டினால் மட்டுமே தீர்வு கிடை க்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x