

கூவத்தூரில் இருந்து சசிகலா வருவதற்கு முன் திட்டமிட்டு, மாறு வேடத்தில் தப்பி வந்ததாக, முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் தெரிவித்தார்.
மதுரை தெற்கு எம்எல்ஏ சர வணன் மற்றும் மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சசிகலா தரப்பில் இருந்து மாறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தினசரி பலர் வருகின்றனர். இந்த அடிப்படையில் ஏற்கெனவே, தற்போதைய எம்எல்ஏக்கள் 7 பேர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். அதேபோல், எம்பிக்கள் 11 பேர் நேற்று முன் தினம் வரை முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து அவர் அணியில் இணைந்தனர்.
தற்போது சரவணன், ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்ததையடுத்து இந்த அணியில் எம்எல்ஏக்கள் எண் ணிக்கை 8 ஆகவும், எம்பிக்கள் எண் ணிக்கை 12 ஆகவும் உயர்ந்தது.
கூவத்தூரிலிருந்து தப்பிவந்து தொடர்பாக சரவணன் கூறியதாவது:
மக்களின் உண்மை பிரதிநிதி யாக ஜெயலலிதாவால் அடை யாளம் காணப்பட்டவர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் தொடர்ந்து தமிழக முதல்வராக செயல்பட்டு நல்லது செய்வார் என மக்கள் எதிர்பார்த்தனர். இந்நிலை யில் சட்டப்பேரவை உறுப்பினர் கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள் ளனர். நான் அங்கிருந்து தப்பிப்பதற் காக சாதாரண பெர்முடாஸ், டீ-சர்ட் அணிந்து நல்ல சந்தர்ப் பத்தை எதிர்பார்த்து காத்திருந் தேன். இன்று (நேற்று) மதியம் சசிகலா அங்கு வருவதற்கு முன் மாறுவேடத்தில் தப்பிவிட வேண் டும்; இல்லாவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்று திட்டம் போட் டேன். அங்கு என்னைப்போல் அனைத்து சட்டப்பேரவை உறுப் பினர்களும் மனதளவில், உடலள வில் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் மனம் நொந்துதான் இங்கு வந்துள்ளேன்.
முதல்வர் ஓபிஎஸ் தொடர்ந்து தமிழகத்தை ஆளப்போவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. இடையில் 5-6 நாட் களும் மக்கள் பணிதான் செய்து கொண்டிருந்தேன். காலையில் 3 மணி முதல், இரவு 1 மணிவ ரை தொடர்ந்து வாட்ஸ்-அப், முக நூல் போன்றவற்றில் தொகுதி மக்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தோம். கண்டிப் பாக சட்டப்பேரவையில் வாக் கெடுப்பு நடந்தால், இங்கு வந்தவர் களும், வராதவர்களும் முதல் வருக்குத்தான் வாக்களிப்பார்கள். என்னைப்போல், பலரும் குமுற லுடன் இருந்து கொண்டிருக் கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மதுரை எம்பி., கோபாலகிருஷ்ணன் பேசும்போது, ‘‘கடந்த 7 நாட்களாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் யாரும் வீட்டுக்கு செல்லவில்லை. நான் இங்கு புறப்பட்டு வரும்போது, வீட்டில் மனைவி குழந்தைகள் வாழ்த்தி அனுப்பினர். இந்த இயக்கம் புனித ரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். கடந்த 1972-ம் ஆண்டு எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தொடங்கினார். அந்த 1972-ம் ஆண்டு இன்று திரும்பியுள்ளது’’ என்றார்.