Last Updated : 20 Jul, 2016 12:08 PM

 

Published : 20 Jul 2016 12:08 PM
Last Updated : 20 Jul 2016 12:08 PM

சாகுபடியில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க விவசாயிகளுக்கு ‘கிசான் சுவிதா’ மென்பொருள் அறிமுகம்

வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள கிசான் சுவிதா மென்பொருளை விவசாயிகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொடுப்பதில் வேளாண் துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயத்துக்குத் தேவையான அடிப்படை தகவல்களான காலநிலை மாற்றம், மழையளவு, பருவநிலை மாற்றம், வேளாண் விளை பொருள்களின் அன்றைய சந்தை விலை விவரங்கள், தொ ழில்நுட்ப தகவல்கள், பயிர் பாது காப்பு தொடர்பான தகவல்களைப் பெறுவதில் விவசாயிகள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். விவசாயிகள் இதுபோன்ற விவரங்களைப் பெற வேளாண் அலுவலர்களை நேரில் சந்தித்து தகவல்களைப் பெற வேண்டியுள் ளது. இதனால் விவசாயிகளுக்கு கால விரயமும், அலைச்சலும் ஏற்படுவதால் பலர் புதிய தொ ழில் நுட்பங்களை அறிவதில்லை.

இதைத்தவிர்க்கும் வகையில் மத்திய அரசு கிசான் சுவிதா என்ற வேளாண் மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் பல்வேறு தகவல் க ளைப் பெற முடியும். இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குநர் க.முத் து முனியாண்டி கூறியதாவது:

கிசான் சுவிதா மென்பொருள் மூலம் விவசாயிகள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே சாகுபடி சார்ந்த அனைத்து சந்தேகங்களுக் கும் விளக்கம் பெற முடியும். அதோடு, பொருள்களுக்கான அன்றைய சந்தை நிலவரம் குறித்த தகல்களையும் பெற முடியும்.

குறிப்பாக பருவநிலை என்ற தொகுப்பில் விளைபொருள் விதைப்பு, பருவநிலை மாற்றம், மழை நிலவரம் குறித்த விவரங் களை 5 நாள்களுக்கு முன்பே அறிந்துகொள்ளலாம்.

இதன்மூலம் தானிய இழப்பு, ஆட்கள் விரயம் போன்றவற்றைத் தவிர்க்க முடியும். இடுபொருள் விற்பனையாளர் விவரம் குறித்த தொகுப்பில் உரம், விதை, மருந்துகள், பண்ணைக் கருவிகள் போன்றவை தங்கள் வட்டாரப் பகுதியில் எங்கு கிடைக்கிறது என்ற விவரம், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெறலாம். இதனால் விவசாயிகள் வீண் அலைச்சலைத் தவிர்க்கலாம்.

மேலும், சந்தை விலை நிலவரம் குறித்த தொகுப்பில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை அறுவடைசெய்து விற்பனைக்கு எடுத்து வருவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் உள்ள சந்தைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அன்றாட விலை நிலவரத்தை அறியலாம். இதனால் எங்கு அதிக விலை கிடைக்கிறது என்பதை அறிந்து அதிக விலைக்கு விளைபொருள்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம். உள்ளூர் சந்தை, வட்டார, வெளி மாவட்ட, வெளி மாநில சந்தை நிலவரங்க ளையும் விவசாயிகள் இருந்த இடத்திலிருந்தே அறிந்துகொள்ள முடியும்.

அதோடு பயிர் பாதுகாப்பு தொகுப்பில் அனைத்து பயிர் களைத் தாக்கும் பூச்சி வகைகள், நோய் தாக்குதல், அதற்கு என்ன வகையான மருந்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொள்ள லாம். இந்த கையடக்க வசதி களைப் பெற விவசாயிகளோ அல்லது அவர் குடும்பத்தில் ஒருவரோ ஸ்மார்ட் செல்போன் மட்டும் வைத்திருந்தால் போதும்.

வேளாண் அதிகாரிகள் ஒவ் வொரு பகுதியாக நேரில் வந்து கிசான் சுவிதா மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொடுப்பது டன் அதன் செயல்விளக்கம் குறித் தும் விளக்குவார்கள்.

இதற்காக அவர்களுக்கு வைஃபை மோடம் வழங்கப்பட் டுள்ளது. விவசாயிகள் இப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகச்சிறந்த சாகுப டியை மேற் கொள்வதோடு அதிக லாபமும் பெறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x