

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையில் வியாழக்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக நுங்கம் பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், அண்ணாசாலை, எழும்பூர், வேப் பேரி உள்ளிட்ட இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “நுங்கம்பாக்கத்தில் உள்ள மொபைல் தொலைபேசி இணைப்பகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் சில இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டுவிடும்” என்றனர்.