பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி கோட்டை நோக்கி பாஜக பேரணி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி கோட்டை நோக்கி பாஜக பேரணி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
Updated on
1 min read

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற பேரணியில் நூற்றுக் கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடும் பெண்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தியும் பாஜக சார்பில் சென்னையில் கோட்டை நோக்கி நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச் செய லாளர் முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களைச் சேர்ந்த பாஜக மகளிர் அணியினர், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முரளிதர ராவ்

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப் பட்ட பேரணியை முரளிதர ராவ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு டாஸ்மாக் நாடாகி விட்டது என்று தேர்தல் பிரச்சாரத் தின்போது நாங்கள் சொன்னோம். டாஸ்மாக் மதுபானக் கடைகள் தமிழகத்தையும், தமிழக மக்களை யும் அழித்து வருகிறது. மதுவால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். வருமானத்துக் காக திமுகவும், அதிமுகவும் டாஸ்மாக்கை ஊக்கப்படுத்துகின் றன. இதனால் மக்களின் வருமானம், குடும்பம், ஆரோக் கியம், குழந்தைகளின் படிப்பு ஆகியன பாதிக்கப்படுகின்றன. மதுவால் பெண்களுக்கு எதி ரான குற்றங்களும் அதிகரித் துள்ளன.

தமிழகத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் பாஜக நிச்சயம் பாதுகாக்கும். மு.க.ஸ்டா லின் மாட்டிறைச்சியை விரும்பு கிறார். மக்களுக்கு பசும்பாலை கொடுக்க பாஜக விரும்புகிறது. தமிழக மக்களுக்கு மதுவுக்கு பதிலாக பசும்பால் கொடுப்போம். அதன்மூலம் அவர்களின் ஆரோக் கியத்தையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் பெருக்குவோம். மதுக்கடைக்கு எதிரான இந்தப் போராட்டம் தொடக்கம்தான்.

இவ்வாறு முரளிதர ராவ் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கடைசி டாஸ்மாக் கடை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும். மதுக்கடைகளை மூடுவதுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மறு வாழ்வு மையங்களை திறக்க வேண்டும். தமிழர்கள் மீது உண்மையிலே அக்கறை இருந் தால் திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளை மூடும்படி மு.க.ஸ்டா லின் உத்தரவிட வேண்டும். திராவிடக் கட்சிகள் நடத்துவது சாராய ராஜ்ஜியம். பாஜக நடத்தப் போவது ராம ராஜ்ஜியம், கிராம ராஜ்ஜியம்’’ என்றார்.

கோட்டையை நோக்கி பேரணி புறப்பட்ட பேரணி, சென்னை பல்கலைக்கழகம் வரை சென்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண் கள் பங்கேற்று, டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக கோஷ மிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in