

பெரம்பலூர் மின்மாவட்ட மேலாளர் பணிக்கு தகுதிவாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம என ஆட்சியர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
பி.ஈ, பி.டெக் (கணினி அறிவியல், கணினி அறிவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பவியல்), அல்லது இளநிலை பட்டம் மற்றும் எம்.சி.ஏ, எம்.எஸ்.சி (கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல்) பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மின்மாவட்ட மேலாளர் பணிக்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இதர அடிப்படை தகுதிகள், வயது வரம்பு, பயிற்சி காலம், உதவித்தொகை, பணியிடம், தேர்வு முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை >http://perambalur.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை ஆட்சியரகத்தில் சமர்பிக்க கடைசி நாள் நவ.5. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் மின்மாவட்ட மேலாளர் பணிக்காக விண்ணப்பித்தல் தொடர்பாக ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரியலூர் மாவட்ட அதிகாரபூர்வ அரசு இணையதளத்தில் >http://ariyalur.nic.in இதற்கான விரிவான தகவல்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.