அடுக்கடுக்கான புகார்கள்: உடுமலை ராதாகிருஷ்ணன் பதவி பறிபோன பின்னணி

அடுக்கடுக்கான புகார்கள்: உடுமலை ராதாகிருஷ்ணன் பதவி பறிபோன பின்னணி
Updated on
2 min read

அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராதாகிருஷ்ணன் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சி வி.ஜெயராமன் நியமிக்கப் பட்டுள்ளார்.

உடுமலைப்பேட்டை ராதா கிருஷ்ணன் பதவி பறிப்பு குறித்து அதிமுக வட்டாரம் கூறியது:

கட்சியின் சீனியர்கள் மத்தியில் அவர் மீது கடும் அதிருப்தி இருந்தது. கட்சியின் எம்.ஜி.ஆர் மன்றம் தொடங்கி மீனவர் அணி வரை பல்வேறு பொறுப்புகளும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கே முன்னுரிமை தருகிறார். கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கு செவி சாய்ப்பதில்லை என அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்துகின்றனர்.

மேலும், இப்பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் சண்முக வேலு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை மதிக் காத போக்கு என கட்சிக்குள்ளேயே சீனியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல் கின்றனர். கட்சியிலிருந்த பலர் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தியதால், கட்சியின் அடிப் படை பொறுப்பிலிருந்து சிலர் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்காக மூங்கில்தொழுவு பஞ்சாயத்துத் தலைவர் மகேந்திரன் என்பவரை சிபாரிசு செய்திருக்கிறார் ராதா கிருஷ்ணன். அவர் கடந்தமுறை பூளவாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நின்று தோற்றவர். கேஜிஎஸ் எனப்படும் கேஜி சண்முகம். இவர் உடுமலை அதிமுக நகரச் செயலாளர். இவரது மகள்தான் ஷோபனா. உடுமலை நகர்மன்றத் தலைவர். இவர்கள் 2 பேரும் ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் மகேந்திரனோடு தந்தை, மகள் இருவரையும் தலைமைக்கு சிபாரிசு செய்துள்ளார் என உளவுத்துறை தலைமைக்கு அனுப்பியதாக தகவல்.

மேலும், கடந்த திமுக ஆட்சியில், உடுமலை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக அப்பகுதியில் இருந்த பொது மக்களை அப்புறப்படுத்தி மாரி யம்மன் நகருக்கு அனுப்பினர். அந்த இடத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பிப்ரவரி மாத ஆரம்பத்தில் இருசக்கர வாகன ஸ்டாண்டாக மாற்றிய பிரச் சினையில், நடவடிக்கை எடுக்க வேண்டிய உடுமலை நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லையாம். இது தொடர்பாக நகர்மன்றக் கூட்டத்தில் பேசலாம் என்றால்கூட கடந்த 3 மாதங்களாக நகர்மன்றக் கூட்டம் நடத்தப்படவில்லையாம். இதன் பின்னணியிலும் நகர்மன்றத் தலைவருக்கு பக்கபலமாக ராதாகிருஷ்ணன் இருந்ததாக புகார் மேல் புகார் அனுப்பினார்களாம் லோக்கல் அதிமுகவினர்.

மேலும், கேபிள் வாரியம் மூலம் அரசுக்கு கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தலைமைக்கு தகவல்கள் எட்டியுள்ளன. குறிப்பாக தென்மாவட்டங்களான, மதுரை, நாகர்கோவில், கன்னி யாகுமரி மாவட்டங்களிலிருந்து இவர்மீது ஏகப்பட்ட புகார்களாம். இந்நிலையில், உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எம்பி சீட் தருவதற்காகத்தான் பதவி பறிக்கப்பட்டதாகவும் பேசிக் கொள்கின்றனர் அதிமுகவில் சிலர்.

இது குறித்து அவரிடம் பேச முயற்சித்து, அவரது எண்ணில் தொடர்பு கொண்டோம். தொடர்ந்து மணி ஒலித்தது. யாரும் பேசவில்லை.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் நீக்கம்

தென்சென்னை தொகுதி அதிமுக எம்.பி., சிட்லபாக்கம் சி.ராஜேந்திரன் மீது சில மாதங்களுக்கு முன்பு ஊழல் புகார்கள் எழுந்தன. ராஜேந்திரன் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள், பணம் வாங்கிக் கொண்டு, தனியார் எண்ணெய் நிறுவனத்துக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சிட்லபாக்கம் ராஜேந்திரன், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படும் வரை, மத்திய மாவட்ட பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா மேற்கொள்வார் என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in