Published : 14 Sep 2016 08:45 AM
Last Updated : 14 Sep 2016 08:45 AM

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் 18-ம் தேதி ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். காவிரிப் பிரச்சினை, உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். எனவே, மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் அக்டோபரில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள் ளது. தேர்தல் அட்டவணை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் செப் டம்பர் 16 முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி யின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். அதனைத் தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் காங் கிரஸ் உட்பட எந்தெந்த கட்சிகளு டன் கூட்டணி அமைப்பது, வேட் பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவை எப்படி எதிர்கொள்வது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக திமுக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் இரு மாநிலங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காவிரி பிரச்சினைக்காக திமுக சார்பில் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு வெளியாகும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x