தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 20 அதிநவீன ரோந்து படகுகள்: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 20 அதிநவீன ரோந்து படகுகள்: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
Updated on
1 min read

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு 20 அதிநவீன ரோந்து படகுகள் வர உள்ளதாக கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித் துள்ளார். தீவிரவாதிகள் ஊடுரு வலைத் தடுக்கும் வகையில் பாது காப்பு ஒத்திகை விரைவில் நடை பெற உள்ளதாகவும் அவர் கூறி யுள்ளார்.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை உட்பட 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,076 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப் பட்டன. இந்த எல்லைக்குள் உள்ள 591 மீனவ கிராம மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சந்தேக நபர்களின் நடமாட்டம் காணப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவுவதைத் தடுக்க 6 மாதத் திற்கு ஒருமுறை ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாது காப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்த போலீஸார் கடல் வழி யாக தமிழகத்திற்குள் ஊடுருவு வதும், அதைக் கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸார் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது போலவும் ஒத்திகை நடைபெறும். அதேபோல் விரைவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது என கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், “கடல் வழி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது 24 ரோந்து படகுகள் உள்ளன. மேலும் 19 மீட்டர் நீளமுள்ள தொழில்நுட்பம் மிகுந்த 20 அதி நவீன ரோந்து படகுகளை மத்திய அரசு தமிழகத்திற்கு விரைவில் வழங்க உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மணல் பரப்பிலும் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளோம். அதேபோல், ஏற்கனவே கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு 12 காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிதாக 20 கட்டப்பட்டு வருகிறது. மேலும் 10 காவல் நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in