Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

மூவர் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் துண்டறிக்கை

ராஜீவ் கொலை வழக்கு குற்ற வாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்திருக் கும் நிலையில் தமிழகத்தில் ராஜீவ் காந்தியுடன் அப்பாவித் தமிழர் களையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளிகளை மன்னிக்க முடியுமா.. மறக்க முடி யுமா? தமிழர்களே சிந்திப்பீர்’ என்று சிவகங்கை மாவட்ட காங்கிரஸார் நான்கு பக்க துண்டறிக்கையை விநியோகித்து வருகின்றனர்.

’சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்..’ என்ற தலைப்பில் சுற்றுக்கு விடப் பட்டிருக்கும் அந்த துண்டறிக்கை யில், ராஜீவ் கொலையுண்டு கிடக் கும் படத்துடன் அந்தச் சம்பவத் தில் பலியான தியாகி லீக் முனு சாமி, எஸ்.சந்தாணி பேகம், செங்கல்பட்டு எஸ்.பி.யான டி.கே.எஸ்.முகமது இக்பால், பல்லாவரம் காவல் ஆய் வாளர் ராஜகுரு எஸ்.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் எட்வர்டு ஜோசப் ஆகி யோரின் படங்களையும் பிரசுரித்து அவர்களின் சாவுக்கு நியாயம் கேட்டிருக்கிறது காங்கிரஸ்.

துண்டறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: ராஜீவ் கொல்லப் பட்டபோது பலியானவர் களுக்கு குழந்தை குட்டிகள் இல்லையா? மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தமிழர்கள் என ஒரு பிரி வினர் கோஷம் போடுகின்றனர். அப்படியானால், ராஜீவோடு இறந் தவர்கள் மட்டுமென்ன சிங்கள வர்களா?

குற்றவாளிகளை குற்றவாளியாகப் பார்க்காமல் இன அடையாளங் களை கொடுத்துக் கொண்டிருந்தால் யாரையும் தண்டிக்க முடி யாது. ஆட்டோ சங்கரும் சந்தன வீரப்பனும் தமிழர்கள்தான். பேரறி வாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்தால் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைக்குள் ளான நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூவரும் தமிழர்கள்தான். அவர் களையும் விடுவித்து விடலாமா?

மூவரின் தூக்குத் தண்ட னையை ரத்து செய்யக் கோரி வழக்கறி ஞர்கள் போராட்டம் நடத்தினார் கள். இதே வழக்கறிஞர்கள் ராஜீவ் கொலை நடந்த சமயம் கொலை யாளிகளுக்காக ஆஜராக மறுத்தார் கள். அவர்களுக்காக ஆஜரான வக் கீல் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

‘மரண தண்டனை என்பதெல் லாம் காட்டுமிராண்டித் தனம்’ என்று கொலையாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் சொல்கிறார்கள். இவர்களது நோக்கம் மரண தண் டனையை ரத்து செய்வதல்ல. அது தான் நோக்கம் என்றால் அப்சல் குருவுக்கும் அஜ்மல் கசாப்புக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந் தார்கள்?

இப்படி ஒவ்வொரு குற்றவா ளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது; சட்டாம் பிள்ளைகளின் ஆட்சிதான் நடக் கும். மரண தண்டனை விதிக்கப்பட லாம் என்ற நிலை இருக்கும்போதே படுபாதக செயலை செய்யத் தயங் காதவர்கள், அதை ரத்து செய்துவிட் டால் எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணியமாட்டார்களா என துண்டறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த துண்டறிக்கை குறித்து ‘தி இந்து’விடம் பேசிய சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜரத்தினம், ’’ஏதோ இருவருக்கிடையில் நடந்த மோத லில் எதார்த்தமாக ராஜீவ் கொலை நடக்கவில்லை. திட்டமிட்டு ஒத் திகை பார்க்கப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை அது. ராகுல் காந்தி யின் இடத்திலிருந்து சிந்தித்தால் அனைவருக்கும் அந்த வலி புரியும்’’ என்றார்.

ராஜபக்சேவுக்கு 6 மாத சிறை விதித்தால் ஏற்பார்களா?

பயங்கரவாதிகளை பழிவாங்குவதாகச் சொல்லி தமிழர்களை கொன்று குவித்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஒருவேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனையும் 600 ரூபாய் அபராதமும் விதித்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x