Published : 09 Jun 2016 07:52 AM
Last Updated : 09 Jun 2016 07:52 AM

சென்னையில் குடோன் காவலாளியை கட்டிப் போட்டு 7 சொகுசு கார்கள் திருட்டு: 5 கார்களை போலீஸார் மீட்டனர்

காவலாளியை கட்டிப்போட்டு ஹுண்டாய் குடோனில் 7 சொகுசு கார்களை திருடிச் சென்றுவிட்டனர். இதில் 5 கார்கள் கண்டுபிடிக்கப் பட்டு மீட்கப்பட்டுள்ளன.

சென்னை கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் ஹுண்டாய் கார் ஷோரூம் உள்ளது. இங்கு கார்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால், மணப்பாக்கம் அம்பேத்கர் தெருவில் ஒரு தனியார் குடோனை வாடகைக்கு எடுத்து கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவில் இந்த குடோனில் 65 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மனோகரன் என்ற தனியார் நிறுவன காவலாளி மட்டும் பாதுகாப்புப் பணிக்காக இருந்தார். நேற்று காலை 4 மணியளவில் 7 பேர் கொண்ட கும்பல் குடோனுக்கு வந்து, காவலாளி மனோகரனை சரமாரியாக தாக்கி, சேரில் கட்டிப் போட்டனர். அவரது வாயில் துணியை வைத்தும் அடைத்தனர்.

பின்னர் குடோனில் இருந்த 7 கார்களை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். திருடப்பட்ட 7 கார்களும் தலா ரூ.60 லட்சம் மதிப்புள்ள ‘கிரேட்டா’ வகையைச் சேர்ந்த சொகுசு கார்களாகும். காலை விடிந்த பின்னர் அந்த வழியாக நடைபயிற்சிக்கு வந்தவர்கள் காவலாளி கட்டப்பட்டு கிடப்பதை பார்த்து, அவரை மீட்டுள்ளனர். நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக் கும் தகவல் கொடுத்தனர். திருடர் கள் தாக்கியதில் காயம் அடைந்த மனோகரன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸார் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். கார்கள் திருடப்பட்டது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக் கும் தகவல் தெரிவித்தனர். மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் மாவட்டங் களில் உள்ள காவல் சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட் டன. சென்னையில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வளசரவாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவில் புதிதாக 5 கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத் தப்பட்ட விசாரணையில், அவை ஹுண்டாய் குடோனில் திருடப்பட்ட கார்கள் என்பது தெரிந்தது. உடனே கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு கார்களில் பதிவாகி இருந்த திருடர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

கங்கையம்மன் கோயில் தெருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் திருடர்கள் கார்களில் வருவதும், வரிசையாக கார்களை நிறுத்திவிட்டு செல்வதும் பதிவாகி இருந்தன. மேலும், அவர்களின் உருவங்களும் கேமராவில் தெளிவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

7 கார்களை திருடியவர்கள், 2 கார்களை மட்டும் எடுத்துச் சென்று விட்டனர். மீதமுள்ள 5 கார்களை பின்னர் வந்து எடுத்துக்கொள்ள லாம் என்று நினைத்து கங்கை யம்மன் கோயில் தெருவில் நிறுத்தி யுள்ளனர். அதற்குள் போலீஸார் அதை கண்டுபிடித்து 5 கார்களை யும் மீட்டுள்ளனர். 2 கார்களில் தப்பிச் சென்ற 7 பேரை போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

போலி நம்பர் பிளேட்கள்

கண்டுபிடிக்கப்பட்ட 5 கார்களி லும் போலி நம்பர் பிளேட்கள் இருந்தன. அதே பகுதியில் உள்ள குமரன் ஸ்டிக்கர்ஸ் கடையில் ஒரு கும்பல் 10 நம்பர்களை கொடுத்து போலி ஸ்டிக்கர்களை தயாரித்து வாங்கிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

குடோனில் இருக்கும் கார்களில் சாவி இருக்கும். அங்குள்ள 65 கார் களில் கிரேட்டா வகை கார்கள்தான் விலை உயர்ந்தவை என பல தக வல்கள் திருடர்களுக்கு தெரிந்துள் ளன. எனவே, ஹுண்டாய் நிறுவனத் தில் வேலை பார்க்கும் நபர்களுக் கும் இந்த திருட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x