Published : 01 Mar 2017 10:06 AM
Last Updated : 01 Mar 2017 10:06 AM

இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்க கோரி நெடுவாசல் போராட்டம் பரவுகிறது: சென்னையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்

இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாச லில் 13-வது நாளாக நேற்று நடை பெற்ற போராட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள் என பெருந் திரளானோர் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அடித்து, உதைத்து இழுத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு, நெடுவாசல், கோட்டைக் காடு, கருக்காகுறிச்சி, வாணக் கன்காடு ஆகிய இடங்களில் ஆழ் துளைக் கிணறு அமைத்து எரி பொருள் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க பிப்.15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

விவசாயம் நிறைந்த, டெல்டா பகுதியாக உள்ள இப்பகுதியில் இயற்கை எரிவாயு எடுத்தால் சோலைவனமாகக் காட்சி அளிக்கும் இப்பகுதி பாலைவனமாக மாறும். இங்கு வசிப்போர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், நோய் பாதிப்பு ஏற்படும்.

எனவே, இந்த திட்டத்தை செயல் படுத்தக் கூடாது என வலியுறுத்தி கடந்த 16-ம் தேதி முதல் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசலில் ஆலமரத்தடியில் நடைபெற்று வரும் இந்த போராட் டத்தில் நெடுவாசல் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராள மான கிராம மக்களும் ஈடுபட்டுள் ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக நேற்று பல்வேறு கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது கலப்பை, மண் வெட்டி போன்ற வேளாண் கருவி களோடு விவசாயிகள் ஊர்வல மாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஏராளமான பெண்கள் கருப்புக் கொடிகளுடன் ஊர்வலமாக வந்தனர். மேலும், பெண்கள் கிராமிய பாடல்களை பாடி போராட்டக் களத்தை உற்சாகப்படுத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோருக்கு கிராம பொதுமக்கள் சார்பில் சைவ உணவு சமைத்து வழங்கப்பட்டது.

கவுதமன், யுவராஜா

இயக்குநர் கவுதமன், தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா, காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஜோதிமணி, உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துப் பேசினர். நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவ தால் போராட்டக் களம் விரி வடைந்துள்ளது.

மாணவர்களுக்கு அடி, உதை

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று காலையில் கூடிய நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திடீரென போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீஸார், மாண வர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இத னால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீஸார் மாணவர்களை அடித்து, உதைத்து இழுத்துச் சென்றனர். இதில் 6 மாணவர்களின் கால்களில் ரத்தம் வந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக 12 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.

இன்று கடையடைப்பு

நெடுவசாலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனு மதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட்டத் தில் ஈடுபட உள்ளதாக மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் சீனு.சின்னப்பா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x