Published : 19 Jun 2017 09:32 AM
Last Updated : 19 Jun 2017 09:32 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் நாளை சேர்க்கை: பெற்றோர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்களுக்கு நாளை (20-ம் தேதி) சேர்க்கை நடக்க உள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் சுய நிதிப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு களில் 25 சதவீத இட ஒதுக் கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை, இணையத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.

இதில், சேர்க்கைக்கான குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி கடந்த மாதம் 31-ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் நடந்தது. அந்தப் பணியில் திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி, முகப்பேர், அம்பத்தூர், மதுரவாயல், திருவொற்றியூர், மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வரவில்லை.

ஆகவே, சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் நிலுவையாக உள்ள 453 மாணவ - மாணவிகள், நர்சரி மற்று பிரைமரி பள்ளிகளில் நிலுவையாக உள்ள 91 மாணவ - மாணவிகள் என, 544 காலியிடங்கள் உள்ளன.

இந்த இடங்களை நிரப்பும் வகையில், சம்பந்தப்பட்ட பள்ளி களில் நாளை காலை 10 மணி அளவில், கல்வித் துறை சார்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் சேர்க்கை நடைபெறவுள்ளது. இணையத்தின் மூலம் விண்ணப் பம் செய்து, சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் நாளை காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று காலியாக உள்ள இடங்களில் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பெற்றோர்கள் நாளை காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை சேர்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x