Published : 11 Apr 2017 07:42 AM
Last Updated : 11 Apr 2017 07:42 AM

இடைத்தேர்தல் ரத்துக்கு கண்டனம்: ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் முற்றுகை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தைக் கண்டித்து, சுயேச்சை வேட்பாளர்கள், தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் நடத் தும் அலுவலர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 12-ம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடக்கவிருந்தது. இந்நிலையில், அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.கே.நகரில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் அவர் களது ஆதரவாளர்களும் தண் டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர் ஒருவர் முகத்தில் கரியை பூசிக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

இது தொடர்பாக சுயேச்சை வேட்பாளர் பி.சக்கரவர்த்தி கூறும் போது, ‘‘எங்களுக்கு சின்னம் வழங்கிய பிறகு 10 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்துக்கு அவ காசம் வழங்கப்பட்டது. கடும் சிரமத் துக்கிடையே, நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டோம். ஒரு வேட் பாளர் பணம் கொடுத்தார் என்பதற் காக தேர்தலையே ரத்து செய் வது தவறு.

தேர்தல் ஆணையத்திடம் ஆதாரம் உள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, தேர்தலையே ரத்து செய்வதை ஏற்க முடியாது’’ என்றார்.

மற்றொரு சுயேச்சை வேட்பாளர் பி.புவனேஸ்வரி கூறும்போது, ‘‘தவறு செய்தவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, நிறுத்தப்பட்ட தேர்தலை உடனே நடத்த வேண் டும். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டால், தேர்தலை ஆணையம் நிறுத்தி விடுமா? வேட்பாளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் பார்ப்பதை கண்டிக்கிறேன்’’ என்றார்.

‘‘இந்த தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர் என்ற முறையில், என்னிடம் கருத்து கேட்காமல் தேர் தலை ரத்து செய்திருக்கக் கூடாது. பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட வேட் பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு, உடனடியாக தேர் தலை நடத்த வேண்டும். இல்லா விட்டால், எங்களது தேர்தல் செலவுத் தொகை மற்றும் டெபாசிட் தொகையை தேர்தல் ஆணையம் உடனடியாக வழங்க வேண்டும்’’ என்று சுயேச்சை வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் வலியுறுத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x