

சென்னை: பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு, 2 சிறப்பு ரயில்களின் சேவைகள் ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி – ராமேசுவரம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச.13 முதல் ஜன.24 வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது. இதேபோல, ராமேசுவரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் டிச.14-ம் தேதி முதல் ஜன.25-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கி உள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நாளை (நவ.30) காலை 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06137), சென்னை பெரம்பூர் வழியாக, அடுத்த 2-வது நாளில் மாலை 4 மணிக்கு பிஹார் மாநிலம் பாட்னாவுக்குச் செல்லும். இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியாகச் செல்லும். இந்த ரயிலில் முன்பதிவு தொடங்கி உள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.