Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சும்: ஆளுநர் நம்பிக்கை

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியபோதும், இந்த நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவைக் கடந்துவிடும் என்று ஆளுநர் ரோசய்யா நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அவர் பேசியதாவது: முதன்மைத் துறையில் ஈடுபட்டுள்ள மக்களின் வருவாயைக் கணிசமாக உயர் த்தாமல், அனைவருக்கும் பலன் அளிக்கக்கூடிய வளர்ச்சியை அடைவது சாத்தியமில்லை. இந்த வகையில், உயர் தொழில்

நுட்பங்களைப் பரவலாக்குதல், நுண்ணீர்ப் பாசனம் மற்றும் பண்ணை இயந்திரப் பயன் பாட்டைப் பிரபலப் படுத்துதல் போன்ற உத்திகளைப் பின்பற்றி,

வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறனையும் மொத்த உற்பத்தியையும் உயர்த்துவதற்கு அரசு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அறுவடைக்குப் பிந்தைய மற்றும் சந்தைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட, கணிசமான முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பழங்கள், காய்கறிகள் போன்ற அதிக வருவாய் தரும் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்

பதற்காக பல புதுமையான முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 2011-12ம் ஆண்டில் அதிக உணவு தானிய உற்பத்தியை எட்டியதற்காக, நமது மாநிலத்துக்கு மத்திய அரசின் ‘கிருஷி கர்மான் விருது’ கிடைத்துள்ளது மனநிறைவு அளிக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அளவு 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ள சூழ்நிலையிலும், 2013-14ம் ஆண்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x