

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திருடி செல்லப்பட்டு, போலீஸாரால் மீட்கப்பட்ட குழந்தையின் முதல் பிறந்த நாளை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஏஎஸ்பி ஜார்ஜி ஜார்ஜ் முன்னிலையில் கேக் வெட்டி பெற்றோர்கள் கொண்டாடினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரு டைய மனைவி லதா. 2015-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா, அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்னர் அவர் தொடர் சிகிச் சையில் இருந்து வந்தார். அப் போது, திருமணியைச் சேர்ந்த பெண் ஒருவர் லதாவின் குழந் தையை திருடி சென்றார். செங்கல் பட்டு ஏஎஸ்பி ஜார்ஜி ஜார்ஜ், குழந்தையை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுத்தார். மருத்துவ மனை வளாகத்தில் இருந்த நபர்கள் அளித்த தகவலின் பேரில், திருமணி பகுதியில் குழந்தையை திருடி சென்ற பெண்ணை போலீ ஸார் மடக்கி பிடித்தனர். 2 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.
இந்த குழந்தைக்கு நேற்று முதல் வயது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
ஏஎஸ்பி அனுமதி
போலீஸார் மீட்டு ஒப்படைத்ததை நினைவு கூறும் வகையில், குழந்தையின் பிறந்த நாளை செங்கல்பட்டு காவல் நிலையத்தில கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, ஏஎஸ்பி அனுமதியுடன் நகர காவல் நிலையத்தில் பெற்றோர்கள் மற் றும் போலீஸார் கேக் வெட்டி குழந்தையின் பிறந்தநாளை கொண் டாடினர்.
இதுகுறித்து. செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜி ஜார்ஜ் கூறிய தாவது: போலீஸாரால் மீட்கப்பட்ட குழந்தைக்கு லோகேஷ் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை மீட்கப்பட்டதை மிகவும் பெரு மையாக கருதுகிறோம்.
போலீஸாருக்கும், பொதுமக்கள் இடையேயான நல்லுறவை மேம் படுத்து வதற்காக குழந்தையின் முதல் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம் என்றார்.