

உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து சந்திக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுவின் கொடுமையால் தமிழகம் பாழாகிக்கொண்டு இருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளுக்கே இந்தப் பழக்கம் வருகிறதே என்று மனம் பதறுகிறது.
சட்டப்பேரவையில் நிகழ்ந்து வருவதை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது. ஒருவருக்கொருவர் கருத்துகளை ஏற்று ஒரு தகுதியான முறையில் விளக்கங்களும், விமர்சனங்களும் ஏற்படக்கூடிய விதத்தில் அமைந்தால் நன்றாக இருக்கும்.
சிறைபிடிக்கப்பட்ட விடு தலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள் ளனர். மெல்ல கொல்லக்கூடிய விஷத்தை உடம்பில் செலுத்தி 107 விடுதலைப்புலிகள் கொல்லப் பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியான செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய அரசும் முந்தைய அரசைப் போலவே இலங்கை அரசோடு சேர்ந்துகொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. மனித உரிமையை காக்கிற உலக நாடுகள் இந்தப் பிரச்சினையை முன்னெடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்புதான் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும். சேவை மற்றும் சரக்கு வரி தொடர்பான சட்டம் தமிழகத்தை பெரிதும் பாதிக்கும். உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து சந்திக்கும் என்றார்.