3 மகள்களுடன் பெண் தற்கொலை: திருட்டு வழக்கில் கணவர் சிக்கியதால் பரிதாப முடிவு

3 மகள்களுடன் பெண் தற்கொலை: திருட்டு வழக்கில் கணவர் சிக்கியதால் பரிதாப முடிவு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் திருட்டு வழக்கில் கணவர் சிக்கியதால், அவமானத் தால் தனது 3 மகள்களுடன் தூக்குப் போட்டு பெண் தற் கொலை செய்து கொண்டார்.

ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த வர் தமிழ்செல்வன்(48). இவர், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் மின் ஊழியராக பணியாற்றி வரு கிறார். இவரது மனைவி ஜெயா(45), மகள்கள் சக்திமாலா(21), கலை வாணி(20), காயத்ரி(18). மூத்த மகள் சக்திமாலா பிஇ முடித்துள் ளார். கலைவாணி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். காயத்ரி நாசரேத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

தமிழ்செல்வனுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழிய ராக பணியாற்றும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவர் சதீஷ்ராஜா மும்பையில் வேலை செய்து வந்தார். மும்பையில் நடைபெற்ற நகை கொள்ளை வழக்கு ஒன்றில் சதீஷ்ராஜா தலைமறைவானார்.

அவரைத் தேடி மும்பை போலீஸார் சில நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்தனர். சதீஷ்ராஜா இல்லாததால் அவரது மனைவியைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்துள்ளனர். இதில் திருட்டு நகைகள் தமிழ்செல்வன் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

தமிழ்செல்வனை மும்பை போலீஸார் நேற்று முன்தினம் மாலை பிடித்துச் சென்றனர். கணவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஜெயா விரக்தி அடைந்தார். அவர்களது வீடு நேற்று காலை வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர், ஆழ்வார்திருநகரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டுக்குள் 2 அறைகளில் ஜெயாவும், அவரது 3 மகள்களும் தனித்தனியாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கிடந்தனர். 4 சடலங் களையும் கைப்பற்றிய போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in