

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரி வித்து இந்திய மாணவர் சங்கத் தினரும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை நேற்று காலை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
இதற்கிடையில், போராட்டத் தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் மேலாடைகளை கழற்றி விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 100 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.