

தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடருக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை அவைத் தலைவர் தனபால் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.
அவை கூடியவுடன், ஏற்காடு தொகுதி எம்,எல்.ஏ. பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நடந்த சட்ட அலுவல் ஆய்வு கூட்டத்தில், அக். 30ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.