

கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள், தாடியுடன் காணப்படுகின்றனர்.
தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதாவுக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் பதவியை அவர் இழந்ததால், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீர் மல்க பதவியேற்றது.
ஜெயலலிதா கைதான ஒரு வாரத்துக்குள் ஜாமீனில் வந்து விடுவார் என்று அதிமுகவினர் பெரிதும் நம்பிக் கொண்டிருந் தனர். ஆனால், பல முயற்சிகளை மேற்கொண்டும் ஜாமீன் கிடைக்க வில்லை.
பதவியேற்றபோது அழுது கொண்டே பதவியேற்ற அமைச் சர்கள், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வரமுடியாத தால் தற்போது பெரிதும் வருத்தத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
பொதுவாகவே, சோகமாக இருப்பவர்கள், தாடியுடன் இருப்பது வழக்கம். பெரும்பா லான தமிழக அமைச்சர்கள் தற்போது தாடியுடன் காணப் படுகின்றனர். அதனால், தங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜாமீனில் வெளிவரும் வரை தாடியுடன் இருக்க அவர்களில் சிலர் திட்டமிட்டுள்ளதாகத் தெரி கிறது. முதல்வர் பன்னீர்செல்வம் கூட வழக்கத்துக்கு மாறாக தாடியுடனேயே காணப்படுகிறார்.
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் ஆனந்தன் போன்ற பல அமைச்சர்கள் தாடியுடனே காணப்படுகின்றனர். அவர்களது அலுவலகத்தில் உள்ள சிலர்கூட தாடியுடன் உள்ளனர்.
தாடிக்கான காரணத்தை அமைச்சர்கள் வெளிப்படை யாக சொல்லாவிட்டாலும், ஜெய லலிதாவுக்கு ஜாமீன் கிடைக் காத வருத்தத்தில் அவர்கள் தாடியுடன் இருப்பதாக கூறப் படுகிறது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து தாடியுடன் தான் இருப்பார்கள் எனத் தெரிகிறது.