

சட்டப்பேரவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டம் கடந்த ஜனவரி 23-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்று மாலையே ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. விவாத முடிவில் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதிலுரையை வழங்கினார்.
அதன்பின், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பது தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப் பட்டு நிறைவேற்றப்பட்டது. பேரவை கூட்டம் மறுதேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் பி.தனபால் அறிவித்தார்.