

போயஸ் தோட்ட இல்லத்தில் தன்னை சந்தித்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தமிழருவி மணியன், ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
‘பணம் சம்பாதிக்க நினைப் பவர்கள் என்னுடன் வர வேண்டாம்’ என்று ரஜினிகாந்த் கூறிய வாசகம்தான் அவரை சந்திப்பதற்கான ஆர் வத்தை ஏற்படுத்தியது. அவரு டன் 90 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். தமிழகம் மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிலவரங்கள் மற்றும் பிரச்சினை கள், சவால்கள் குறித்து விரிவாக பேசினோம். அப்போது, அவரு டைய பேச்சில் தனிப்பார்வையும், தெளிவும் இருப்பதை பார்க்க முடிந்தது. தெளிந்த பார்வையில் தான் அவர் அரசியலை பார்க் கிறார். பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவருக்கு இருக்கிறது. தமிழக அரசியலில் உள்ள சிஸ்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆர்வம் ரஜினி காந்துக்கு இருக்கிறது. எல்லா வற்றையும் நுணுக்கமாக அறிந் துள்ளார். அவர் எப்போது, எப்படி அரசியல் களத்தில் நிற்பார் என சொல்ல முடியவில்லை.
விரைவில் அறிவிப்பார்
‘நீங்கள் அரசியலுக்கு வருவது என்று முடிவெடுத்து விட்டால், சாதி, வகுப்புவாத சக்திகளோடு எந்த நேரத்திலும் கைகோர்த்து நிற்காமல் எல்லோருக்கும் பொதுவான மனிதராக உங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண் டும். இதைத்தான் உங்கள் ரசிகர்களும், மக்களும் எதிர்பார்க் கிறார்கள்’ என அவரிடம் என் விருப்பமாக வலியுறுத்தினேன். அரசியலுக்கு வருவது பற்றி அவர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தலைவர் தமிழருவி மணியன் இன்று திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவுள்ளார்.