சர்ச்சைக்குரிய கருத்துகளால் நாட்டில் பிளவு ஏற்படுத்தக் கூடாது: தருண் விஜய்க்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்

சர்ச்சைக்குரிய கருத்துகளால் நாட்டில் பிளவு ஏற்படுத்தக் கூடாது: தருண் விஜய்க்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்
Updated on
1 min read

தென்னிந்தியர்கள் நிறம் குறித்து கருத்து தெரிவித்த தருண் விஜய் வரலாற்று புத்தகங்களைப் படிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்துகளால் நாட்டில் பிளவு ஏற்படுத்துவது தேவையில்லாதது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றியை மக்கள்தான் முடிவு செய்வார்கள். காங்கிரஸ் உடன் இணைந்து தேசிய அளவில் ஊழலில் ஈடுபட் டுள்ளதால் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வருமான வரித் துறை ஆய்வு சரியாகவே நடந்துள்ளது. அமைச்சரிடம் கேட்டுவிட்டு வருமான வரித் துறையினர் ஆய்வு நடத்த மாட்டார்கள். யாரி டமும் கேட்காமல் ஆய்வு நடத்த அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் இந்த ஆய்வு நடந்தி ருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. அதேபோல, வருமான வரித் துறை ஆய்வு நடந்தது என்பதற்காக தேர்தலையே ரத்து செய்ய சட்டத்தில் இடமில்லை.

தருண் விஜய், ஆங்கிலேயர் கள் எழுதிய வரலாற்று புத்தகத் தைப் படித்துவிட்டு தென்னிந் தியர்கள் நிறம் குறித்து சர்ச் சைக்குரிய கருத்தை தெரிவித்து விட்டார். தற்போது பெரிய அளவில் வரலாற்று ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் ஆரியம், திராவிடம் என்று எதுவும் இல்லை. நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே டிஎன்ஏதான். வெயில் எங்கு அதிகமோ அங்கு தோலின் நிறம் கருப்பாக இருக்கும். ஒடிசா விலும் கருப்பு தோல் உடைய வர்கள் இருக்கிறார்கள். எனவே தோலின் நிறத்தால் சமூகத்தை மதிப் பிட முடியாது. ஆகவே, தருண் விஜய் மீண்டும் வரலாற்று புத்த கங்களைப் படிக்க வேண்டும்.

டெல்லி வெயிலில் அமர்ந்து கொண்டு தமிழக விவசாயிகள் எதற்காக போராடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து அப்போது விவசாயிகள் என்னி டம் வேண்டுகோள் வைத்தனர். உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வென்று கொடுத்தேன். தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்குத் தண்டனை கொடுத்த போது, ராஜபக்சேவிடம் பேசி அவர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தேன். அதுபோல விவ சாயிகள் தங்கள் கோரிக்கையை என்னிடம் சொல்லியிருக்கலாமே. போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில்தான் என் வீடு இருக்கிறது. ஆனாலும் யாரும் என்னைப் பார்க்க வர வில்லை. அதேபோல தமிழகத் தைச் சேர்ந்த எம்பிக்கள் பிரத மரையோ, விவசாய அமைச்ச ரையோ பார்த்து விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கலாமே என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in