தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 226 கோடியில் 25 மெகாவாட் காற்றாலை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 226 கோடியில் 25 மெகாவாட் காற்றாலை
Updated on
1 min read

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 225.8 கோடி மதிப்பீட்டில் 25 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இத்துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 21.03.2017 வரை 37.29 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. துறைமுகத்தில் தூய்மையான சூழலை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

துறைமுகத்தில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் சுமார் 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைந் துள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தண்ணீரை அதிக அழுத்ததுடன் பீச்சிய டிக்கக் கூடிய தண்ணீர் அடிப்பான்விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. துறைமுக வளாகத்தில் காற்றின்தரத்தை கண்காணிப்பதற்காக சுற்றுப்புற காற்று தரம் கண்காணிப்பு நிலையங்கள் ரூ. 3.22 கோடியில் அமைக்கப்பட உள்ளன. சரக்குகளை கையாளும்போது அவை விரயமாகாமல் தடுப்பதற்கு சரக்கு தளம் 3 மற்றும் 4-ல் ரூ. 38.10 கோடி திட்ட மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கக் கூடிய 8 நகரும் ஹாப்பர் அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், துறைமுகத்தில் ரூ. 225.8 கோடி திட்ட மதிப்பீட்டில், 25 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சரக்கு கையாளும் தளங்களில் இருந்து கப்பலுக்கு தேவையான மின்சார வசதியை வழங்கும் திட்டம் ரூ. 1.5 கோடி திட்ட மதிப்பீட் டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய துறை முகங்களில் இத்திட்டமானது வ.உ.சிதம் பரனார் துறைமுகத்தில் தான் முதன் முறையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த வசதியை உபயோகிப்பதன் மூலம் தளங்களில் நிற்கின்ற கப்பல்களின் டீஸல் ஜெனரேட்டரை நிறுத்தி கப்ப லுக்கு தேவையான மின் சாரத்தை கப்பல் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதனால் எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

துறைமுகத்தில் ரூ. 92.72 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள இயந்தி ரமயமாக்கப்பட்ட திட்டத்தில் சரக்குதளம் 9-ல் கையாளப்படும் நிலக்கரி, ஹாப்பர் மூலம் கன்வேயர் வழியாக நிலக்கரி சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்படுகிறது. கூடு தலாக, 400 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை துறைமுக நிர்வாக அலுவல கத்தின் மேற்கூரை, துறைமுகசரக்கு கையாளும் பகுதி, பல்நோக்கு கொட்டகை, மருத்துவமனை, பள்ளி, மின்சார உட்பிரிவு மற்றும் கண்காணிப்பு கட்டுபாடு அறை ஆகிய இடங்களில் நிறுவப் பட்டுள்ளது. என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in