

திமுகதான் பின்னணியில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குகிறது என்று சசிகலா ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கூறினர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக் கும் விதமாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து ஏராளமானோர் நேற்று போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். பின்னர், அவர்கள் சசிகலாவை சந்திக்கச் சென்றனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகவும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். சசி கலா ஆதரவு அமைச்சர்கள், முன் னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் அங்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டிய ராஜன்:
கட்டாயப்படுத்தி முதல்வ ரிடம் கையெழுத்து பெற்றனர் என்று கூறப்படுவது உண்மை அல்ல. அனைத்து முடிவுகளுக்கும் உடன் இருந்துவிட்டு இப்போது மாற்றிப் பேசுவது போலித்தனம். இது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்படும். முதல்வராகப் பதவியேற்க வரு மாறு சசிகலாவை ஆளுநர் அழைப்பதில் தவறில்லை. சசிகலா தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி:
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந் தெடுக்கப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, ஆதரித் துக் கையெழுத்திட்டது நாட் டுக்கே தெரியும். 2 நாட்கள் கழித்து ‘கட்டாயப்படுத்தி, நிர்ப் பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கினர்’ என்கிறார். அந்த 2 நாட்களில் நடந்தது என்ன? இது யாருடைய தூண்டுதல்? யார் பின்னணி? மனசாட்சிப்படி இந்த முடிவை எடுத்ததாகக் கூறுகிறார். முன்மொழிந்தபோது, கையெழுத்திட்டபோது மனசாட்சி எங்கே போனது? என்று இதுவரை யாருக்கும் புரியவில்லை. திமுகதான் பின்னணியில் இருந்து அவரை இயக்குகிறது.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா:
‘நம் கட்சியைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள். நீங்கள்தான் பொதுச் செயலாளராக வரவேண்டும். ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோலவே, உங்களுக் கும் நல்ல சகோதரனாக உடனிருப்பேன்’ என்று சசிகலா விடம் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறினார். இதை அவர் மறுக்க முடியாது. தற்போது சுயநலத்துடன் இவ்வாறு செயல்படுகிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக் காது. எந்த விசாரணையாக இருந்தாலும் அதைச் சந்திக்க தயாராக இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்:
ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்துதான் பொதுச் செய லாளராக சசிகலா தேர்ந்தெடுக் கப்பட்டார். சசிகலா காலில் விழுந்து ‘கட்சியின் பொதுச் செயலாளர் நீங்கள்தான்’ என்று சொன்னவர், திமுக தூண்டுதல் காரணமாக இவ்வாறு செயல்படுகிறார். 130-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது. ஓடிப் போன எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.