Published : 02 Mar 2017 08:35 AM
Last Updated : 02 Mar 2017 08:35 AM

சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற எந்த விண்ணப்பமும் வரவில்லை: கர்நாடக சிறைத்துறை தகவல்

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறைக்குள் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சென்னை வழக்கறிஞர் எம்.பி.ராஜாவேலாயுதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கர்நாடக சிறைத்துறையிடம் கோரி யிருந்தார். அதற்கு சிறைத்துறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

இதுதொடர்பாக, கர்நாடக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண் காணிப்பாளர், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு அளித்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தண்டனை கைதியான வி.கே.சசிகலாவை டி.டி.வி.தினகரன் மாலை 3.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சந்தித்துப் பேச நீங்கள் அனுமதித்தீர்களா?

சந்தித்து பேச அனுமதி அளிக் கப்பட்டது. வி.கே.சசிகலாவை 35 முதல் 40 நிமிடம் மட்டும் டி.டி.வி. தினகரன் சந்தித்துப் பேசினார்.

சசிகலாவை தினகரன் சுமார் 4 மணி நேரம் சந்தித்துப் பேச அனுமதித்ததற்கான காரணம் என்ன?

இந்தக் கேள்வி பொருந்தாது.

இதுபோல மற்ற கைதிகளும் தங்களது பார்வையாளர்களை சந்தித் துப் பேச அனுமதி அளித்துள்ளீர்களா?

கர்நாடக சிறைத்துறை விதி களின்படி ஒவ்வொரு கைதியும் தங்களின் பார்வையாளர்களை சந்தித்துப் பேச அனுமதி உண்டு.

டி.டி.வி.தினகரன் சந்தித்துப் பேசிவிட்டு வந்த பிறகு சசிகலாவுக்கு சிறைக்குள் கட்டில், மெத்தை, தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, மின்விசிறி, குளிர்சாதன வசதி, வாட்டர் ஹீட்டர் மற்றும் தனிப்பட்ட குளியலறை போன்ற வசதிகளை செய்து தருவதற்கு சிறைத்துறை நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதா?

தொலைக்காட்சி பெட்டியைத் தவிர வேறு எந்த வசதியும் அவருக்கு செய்து தரப்படவில்லை. மற்ற வசதிகள் சிறைக்குள் செய்து தருவதற்கு அனுமதியும் கிடையாது.

சசிகலா, இளவரசி ஆகியோரை சென்னை மத்திய சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், அம்மாநில அரசுக்கு ஏதாவது பரிந்துரை செய்துள்ளதா?

சம்பந்தப்பட்ட கைதிகளிடம் இருந்து அதுபோன்ற எந்த விண் ணப்பமும் இதுவரை பெறப்பட வில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x