Published : 17 Jun 2016 08:18 AM
Last Updated : 17 Jun 2016 08:18 AM

‘ஆரூரா தியாகேசா’ பக்தி முழக்கத்துடன் திருவாரூரில் ஆழித் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாக ராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஆரூரா தியாகேசா’ என்று கோஷமிட்டபடி, வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இக்கோயிலின் ஆழித் தேர், தமிழகத்தில் உள்ள தேர் களிலேயே முதன்மையானதாகத் திகழ்கிறது. அலங்கரிக்கப்படும் போது இத்தேரின் உயரம் 96 அடி யாகவும், எடை 350 டன்னாகவும் இருக்கும். ஆழித் தேர் அசைந்தாடி வரும் அழகைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் திருவாரூரில் கூடுவர்.

2010-ல் தேர் சிதிலமடைந்ததால், 2011-ல் புதிய தேர் செய்யும் பணி தொடங்கியது. ரூ.2.17 கோடி மதிப் பில் உருவாக்கப்பட்ட ஆழித் தேரில், 9 ஆயிரம் கனஅடி கொண்ட கொங்கு, தேக்கு, பூவரசு உள்ளிட்ட உயர் ரக மரங்கள் பயன்படுத் தப்பட்டுள்ளன. இதில், 63 நாயன் மார்களின் சிற்பங்கள், சிவனின் திரு விளையாடல்கள், பெரியபுராணம் உள்ளிட்டவற்றை விளக்கும் சிற் பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் 26-ல் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. நவம்பர் 8-ல் தியாகராஜர் கோயில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. தேரோட் டத்தை முன்னிட்டு, தேவாசிரியன் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த உற்சவர் தியாகராஜர், கடந்த 14-ம் தேதி இரவு அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந் தருளினார். விநாயகர், சுப்பிர மணியர் தேரோட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் நேற்று காலை 7.45 மணிக்குத் தொடங்கியது. லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘ஆரூரா தியாகேசா’ என்று பக்தி முழக்கமிட்டபடி, வடம்பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து சென்றது. இதைத் தொடர்ந்து, அம்பாள் மற்றும் சண்டி கேஸ்வரர் தேர்களும் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.

ஆழித் தேரோட்டத்தின்போது, ஆங்காங்கே சிவனடியார்கள் சிவ பூதகன வாத்தியங்களை இசைத்த படி நடனமாடினர். தாரைத் தப் பட்டைகளும், அதிர்வேட்டுகளும் முழங்கின. தேரின் சக்கரங்களுக்கு அருகில் பக்தர்கள் செல்ல முடி யாத வகையில், போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தி ருந்தனர். தேரோட்டத்தையொட்டி, பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் ஜூலை 2, 3, 4-ம் தேதிகளில் திருவாரூர் கமலாலய திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x