அமைதியைத் தொடருங்கள்: சேவாக் கருத்து

அமைதியைத் தொடருங்கள்: சேவாக் கருத்து
Updated on
1 min read

அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள் என்று வீரேந்திர சேவாக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் ட்விட்டரில், ''அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள்'' என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், "அமைதியான முறையில் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதைப் பார்க்க அற்புதமாக இருக்கிறது. உங்கள் உணர்வுகளிலும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அமைதியான போராட்டமே அனைவருக்கும் பாடமாக அமையும்" என்று சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in