எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: கூவத்தூரில் தங்கியிருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் தகவல்

எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: கூவத்தூரில் தங்கியிருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் தகவல்
Updated on
1 min read

கூவத்தூரில் தங்கியுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பலர் பேச முன்வர வில்லை. ஒரு சிலர் மட்டுமே பேசினர்.

என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்):

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக் கக் கூடாது என்று பாஜகவினர் நினைக்கின்றனர். வேண்டும் என்றே ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்கிறார். இங்கு எங்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது. இங்கு தங்கி இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி தேவை என்பதற்காகவே ஆம்புலன்ஸ் வரவழைத்தோம். ஆனால், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மயக்க மானதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளியாகிறது. இங்கிருக்கும் எந்த சட்டப் பேரவை உறுப்பினருக்கும் அச்சுறுத்தல் இல்லை

அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் (ஆரணி):

நாங்கள், இங்கு முழு பாதுகாப்புடனும் சுதந்திர மாகவும் இருக்கிறோம். எங்களுக்கு எந்தப் பிரச் சினையும் இல்லை. இப்பொழுது நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள். நான், உங்களிடம் பேசுகிறேன். எந்தக் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறோம்.

பன்னீர்செல்வம் (கலசப் பாக்கம்):

எங்களுக்கு எந்த மிரட்டலும் அச்சுறுத்தலும் இல்லை. முழு சுதந்திரமாக இருக்கிறோம். போலீஸார் வந்து விசாரிக் கிறார்கள். ஆளுநர் எந்த நேரத்தில் அழைத்தாலும் 125 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சென்று பதவி ஏற்க தயாராக இருக்கிறோம். சின்னம்மா ஆசியுடன் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

சத்யா (பண்ருட்டி):

சட்ட பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக கூவத் தூரில் தங்கியுள்ள நாங்கள் சின் னம்மாவை தேர்வுசெய்து முதல்வராக்க எண்ணியிருந்தோம். தற்போது சூழல் மாறியுள்ள தால், சின்னம்மாவின் விருப்பத் துக்கு ஏற்ப, அண்ணன் எடப் பாடியாரை, சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வுசெய் துள்ளோம். எங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்போது, எல்லோரும் ஓரிடத்தில் இருந்தால் விரைவாக சட்டப்பேரவைக்கு செல்ல முடியும் என்பதால் இங்கு தங்கி யிருக்கிறோம். கட்டாயத்தின் பேரில் இங்கு நாங்கள் தங்கி யிருக்கவில்லை

அமைச்சர் நிலோபர் கபீல்:

தமிழகத்தில் தற்போது பல நிகழ்வுகள் நடைபெற்று வரு கின்றன. அதனால்தான் 125 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண் டிருக்கிறோம். யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை. யாரும் எங்களை இங்கு அடைத்து வைக்கவும் இல்லை.

நான் முஸ்லிமாக இருந்தாலும் எனக்காக தனி மரியாதை தருவ துடன், 5 மணி நேரம் தொழுகை நடத்துவதற்காக தனி இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். நாங்கள் ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எம்எல்ஏக்கள் விடுதியில் அனைத்து வசதிகளும் இருக் கின்றன. இருந்தாலும் எதிர்க்கட்சி கள் மற்றும் எதிரிக்கட்சிகள் எங்களுக்கு தொல்லை தராமல் இருப்பதற்காகவே இங்கு தங்கியிருக்கிறோம். காவல் துறை அதிகாரிகள் எங்கள் பாதுகாப்புக்காகத்தான் வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in