

டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க. ஆயத்தமாகி வருகிறது. தே.மு.தி.க. மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலை பதினொரு மணிக்கு அரங்கத்திற்கு வந்த பிரேமலதா, "ஏற்காடு இடைத்தேர்தலில் நாம் போட்டியிடப்போவது உறுதி. அதேபோல் டெல்லியில் விரைவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்துள்ளோம். டெல்லி மூன்று லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். ஒரு லட்சம் வாக்காளர்கள் நமக்கு ஓட்டுபோட்டாலே நாம் வெற்றி பெற்றுவிடலாம். மொழிப்பற்று உள்ள தமிழர்கள் நிச்சயம் நம்மைத்தான் ஆதரிப்பார்கள்" எனப் பேசி உற்சாகப்படுத்தினாராம்.