

சேலம் ஓமலூரைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ், கடந்த 2015 ஜூன் 23-ல் வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில், மறுநாள் ரயில்வே தண்டவாளத் தில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்தார்.
கோகுல்ராஜ் கொலை தொடர் பாக தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது திருச்செங்கோடு போலீ ஸார் கொலை வழக்கு பதிவு செய் தனர். யுவராஜ் நீண்ட தேடலுக்குப் பின் போலீஸில் சரண் அடைந்து, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தற்போது சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குற்றம்சாட்டிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், ‘‘இந்த கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் 725 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டுள்ளது. யுவராஜ் உட்பட 17 பேர் வழக்கில் சேர்க்கப்பட் டுள்ளனர்’’என தெரிவிக்கப் பட்டது.
அதையடுத்து நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘‘சிபிசிஐடி விசாரணை சரியான பாதை யில் சென்றுகொண்டு இருப் பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை’’ எனக் கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.